16
ரசிகமணி டிகேசி
வண்ணார்பேட்டை
27.4.38
நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,
தங்களுடைய அன்பும் உல்லாசமும் கலந்த கடிதம் வந்தது. செல்லையாவும் வாசித்துப் பார்த்துக் கடிதம் நன்றாய் அமைந்திருக்கிறது என்று அனுபவித்தான். இன்னும் மற்ற நண்பர்கள் பார்க்கவில்லை. பார்த்தால் அவர்களும் அனுபவிப்பார்கள். தாங்கள் அனுபவித்துக் கடிதம் எழுதுவதற்கும் நண்பர்கள் வாசிப்பதற்கும் காரணமாய் இருந்தது விமர்சனம் அல்லவா. இது பற்றியே "நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர், பயனில சொல்லாமை நன்று" என்று திருவள்ளுவர் பெரும்போடு போட்டிருக்கிறார். கல்கி சிறந்த எழுத்தாளராய் இருக்கிறதில் அவ்வளவு வருத்தம் இல்லை. டிகேசி சிறந்ததாயிருக்கிறது கல்கி எழுத்து என்று சொன்னதில்தான் வருத்தம். ஆமா புருஷன் அடித்ததில் ஒன்றும் இல்லை. அடுத்த வீட்டுக்காரி சிரித்ததில்தானே கோபம். இப்படி எல்லாம் மணல் வறுக்கிறது சகஜந்தான். ஆனால் நமக்காக வறுத்தால்தான் நாம் நன்றாய் உணரலாம் அனுபவிக்கலாம்.
வட்டத்தொட்டி நண்பர்களில் அனேகர் பத்திரிகை வந்த உடனேயே வாசித்துவிட்டு எனக்கும் ஒரு பிரதி கொண்டு வந்து கொடுத்தார்கள். அவர்களுக்கு ரொம்ப ரொம்ப கோபம். தாங்களும் நாங்குனேரியிலிருந்து கொண்டே வட்டத்தொட்டிக்குள்ளிருந்து நடப்பதுபோல நடந்து கொண்டீர்கள். ஆகையால் வட்டத் தொட்டிக்குக் குறுக்களவு பதினைந்தடி அல்ல காதக் கணக்கில் சொல்லவேண்டும்.
இதுசம்பந்தமாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். பாரதியார் கவி எழுதுவதில் தேர்ந்தவர், தமிழ்நாடு என்றும் போற்றத்தகுந்தவர். சிலர் அளவுகடந்த வார்த்தைகளில்