இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18
ரசிகமணி டிகேசி
உத்தேசம். தாங்களும் அங்கே வந்து போகலாம் அல்லவா. கன்னியாகுமரியிலிருந்து திரும்பி வந்தபிறகு நாங்குனேரி வருகிறதைப் பற்றி யோசிக்கிறேன். நாங்குனேரி வருகிறதென்றால் வட்டத்தொட்டி முழுதுமே வரவேண்டியதுதான். சரியானபடி முகாமை அனுபவித்துவிடத்தான் உத்தேசம்.
நம்மை ஆராவது கண்டு இனம் விசாரிக்க நேரலாம். அப்போது தெ.கி. சிதம்பரநாதன், தொ.மு. பாஸ்கரன் என்று யாரிடமாவது பயந்து பேர் சொல்லுவோமானால் காரியம் மோசத்துக்கு வந்துவிடும்.
உலகமே ரொம்ப தமாஷ்தான். அதற்கு நபர்கள் ரொம்ப ரொம்ப வேணும்.
வீட்டில் அம்மாள் குழந்தைகள் எல்லாம் சௌக்கியந்தானே.
தங்கள்
டி.கே.சிதம்பரநாதன்
❖❖❖