கடிதங்கள்
27
செய்திகளையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். தேரெழுந்துரில் நடக்கப் போகும் கம்பர் விழாவைப் பற்றியும் அவர்களுக்குத் தாங்கள் எழுதியிருப்பதாகவும் சொன்னார்கள். அவர்கள் அனேகமாய் விழாவுக்கு வருவார்கள். தாங்களும் வந்தால் நண்பர்கள் ரொம்பவும் ஆனந்தம் அடைவார்கள்.
திருநெல்வேலி நண்பர்களிடம் நான் சென்னையிலேயே தங்கி விடுவேன் என்று சொல்லி ரொம்ப பயமுறுத்தி யிருக்கிறீர்கள். இது சம்பந்தமாக கலிங்கத்துபரணிச் செய்யுளையும் அழகாக கையாண்டிருக்கிறீர்கள். உண்மையாக செல்லையாவுக்கு உடம்பு செளக்கியம் அடைந்தவுடன் திருநெல்வேலிக்குத் திரும்பிவிடுவேன். சென்னை நண்பர்கள் ஒரு பக்கம் இழுக்கிறார்கள். திருநெல்வேலி நண்பர்கள் மற்றொரு பக்கம் பலபேர் இழுக்கிறார்கள். என் பாடு டக் ஆப் பார் கயிற்றின் பாடாகத்தான் இருக்கிறது. திருநெல்வேலி நண்பர்கள் எல்லோரும் இளைஞர்கள் அல்லவா (15 முதல் 82வரை வயசு) ஆகையால் அவர்களே வெற்றிபெறுவார்கள்.
செல்லையா நாளுக்கு நாள் சுகமடைந்து வருகிறான். இரண்டு வாரத்தில் வேலை பார்க்கக் கூடும்.
அங்கே தாங்கள் அம்மாள் குழந்தைகள் எல்லாரும் செளக்கியந்தானே. தங்கள் கடிதத்தை ரொம்ப நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். வந்தது ரொம்ப சந்தோஷம்.
தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்
❖❖❖