பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை தமிழ்க் கவிதைகளிலும் காப்பியங்களிலும் உள்ள சிறப்பை எவ்வாறு நுகர்தல் வேண்டும் என்பதைக் கூறும் கருவி நூல்கள், தமிழில் இல்லாமல் ஒழிந்தன. தொல்காப்பியர் செய்யுளியலில் சில பகுதிகள் தவிர, இலக்கியத் திறனாய்வு செய்கின்ற தனி நூல்களுள் எதுவும் தமிழில் இல்லை. இந்நிலையில் ஆங்கிலக் கருவி நூல்களைக் கொண்டே தமிழ்க் கவிதைகளை ஆராய்தல் நேரிட்டது. மொழி வளம் முதலிய வேறுபாடு காரணமாக, அவர்களுடைய கோட்பாடு களைச் சிறிது மாற்றியும் கொள்ளலாயிற்று. அவல இயலின் அடிப்படையை மிக நன்கு ஆராய்ந்து முடிவுகள் கூறிய பெரியார், ஹெகல் ஆவார். ஆனாலும், அவருடைய முடிவுகளுள்ளும் பல, காலத்தால் மாறுபடுவன ஆயின. தமிழ் மொழியளவில் அவை முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்படும் தகைமைய அல்ல. எனவே, வேண்டுமிடங்களில் அவருடைய கொள்கைக்குச் சிறிது மாறுபாடான முடிவுகளும் கொள்ளப்பட்டிருக்கின்றன. கம்பராமாயணத்தைப் படிக்கத் தொடங்கிய முதல் முறையிலேயே, புதிய சில கருத்துக்கள் தோன்றத் தொடங்கின. வழி வழியாக வந்த பொருள்கோள் முறையை ஏற்றுக் கொள்ள மனம் மறுத்தது, கம்பன் கட்டிய கலைக்கோயில் ஆழமான பல பொருள்களை உள்ளடக்கி இருப்பதாக உணர முடிந்தது. இப் புதிய