உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§). Carr. 15 வாழும் பகுதியே மிகுதியாகும். ஒரு சமுதாயத்தின் விருப்பு வெறுப்பு, நம்பிக்கை முதலியவற்றை வளர்த்துப் பண்படுத் வதும் அந்தச் சமுதாயத்தின் இலக்கியமே. ஆகையால் அதுவே மனிதவாழ்வைப் பெரிதும் மாற்றியமைப்பது என்பர். ஆகவே சட்டம், அறிவியல் முதலியவற்றை விடப் பெரிய கருவியாய்ச் சமுதாயத்தை உருவாக்குவது இலக்கியம் எனலாம். அதனால் பாட்டு, காவியம், நாடகம் கதை முதலியன இயற்றித்தரும் புலவர்கள் சட்டம் இயற்றும் ஆட்சியாளரைவிட ஆற்றல் மிக்கவர்கள். அழகு நிலைபெறல் நிலையில்லாமல் மாறும் அழகின்பத்தை நிலைபெறச் செய்து வேண்டும்போது கிடைக்கச் செய்வது கலை இலக்கியத்தின் பயன் ஆகும். மன்னா உலகம்' என்றும், நிலையாமையே உலகின் இயற்கை என்றும் சான்றோர் உரைப்பர். யாக்கை, இளமை, செல்வம் முதலியவற்றின் நிலையாமையைப் புலவர் சிலர் உணர்ந்து உணர்ந்து பாடியிருக்கின்றனர். அவை மட்டுமல்லாமல் அழகு உணர்ச்சி என்பதும் நிலையில்லாததே. மேற்கு வானில் மாலையில் காணப்படும் அழகு நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கின்றது. உள்ளம் வியந்து போற்றும் அழகுமிக்க சிறந்த காட்சியை வானத்தில் கண்டு மகிழ்கின்றோம். சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் அதைக்கண்டு மகிழ விரும்பினால் அந்த அழகு புலன் களுக்கு எட்டாத ஒன்றாக ஆகிவிடுகின்றது. நிலை யில்லாமல் மாறிப்போகும் அந்த அழகையும் உணர்ச்சியை யும் மீண்டும் பெற்று மகிழ விரும்பினால் அதற்காகக் கலையின் உதவியை நாட வேண்டியிருக்கின்றது. அதற்கு உற்ற கருவியாய் இருந்து உதவுவது கற்பனையே ஆகும்.