உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 இலக்கிய ஏந்தல்கள் (Lyrical poems) பெருங்கவிஞர் காரதியாரின் நல்லதோரி வீணை செய்தே எனும் பாடல் சிறந்த எடுத்துக் காட்டாகும். இவ்வகையில் கவிஞர் தமிழ் ஒளி, மூத்து கரை திரை வந்திட ஆயுள் முடிந்தது நாமறிவோம்-எனில் கோத்து நமக்குக் கொடுத்திட்ட மாலையின் கோலம் அழிந்திடுமோ? வஞ்சகக் காலன் வருவதும் போவதும் வாழ்க்கை நியதியடா! எனில் செஞ்சொற் கவிதைகள் காலனைவென்று சிரிப்பது இயற்கையடா! என்று காடுந்திறனில் கவிஞர் வாழ்வினும், கவிதைக்கலை காலத்தை வென்று பெருமிதங் கொண்டு சிரிக்கும் செம்மாப்பு நன்கு தெளிவாகின்றது, ‘லிரிக் வடிவிற்குப் பாவேந்தர் பாரதிதாசனாரின் பாடல்களில் சிறந்த சான்றுகள் உள்ளன. இசையமுது' கவிதை நூலில் ஒரு பாமணி கோக்கப்பட்ட திறன் விருமாறு. அதோ பாரடி அவரே என்கணவர் புதுமாட்டு வண்டி கட்டிப் போகிறார் எனைவாட்டி இருப்பவர் உள்ளே முதலாளி செட்டி ஏறுகால் மேல்தான் என் சர்க்கரைக்கட்டி தெரியவில்லையோடி தலையிலேதுப் பட்டி சேரனே அவரென்றால் அதிலென்ன அட்டி இப்பாடலில் தலைவி, தன் தோழியிடம் தனை மணற்த கணவனைக் காட்டிப் பேசுவது கிராமிய (சிற்றுார்)ச்