உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக்கவிதையின் நிலைபேறு தமிழிலக்கிய வ ர ல ா ற் றி ல் காலந்தோறும் பாடுபொருளும், பாடல் வடிவமும் மாறி வருகின்றன. இருபதாம் நூற்றாண்டுக் கவிதையுலகில், புதுக்கவிதை என்ற ஒரு புதிய இலக்கிய வகை தோன்றியிருக்கின்றது. ஆங்கில இலக்கியத் தாக்கத்தால் தமிழில் உருவான புதிய துறை இது பல்லாண்டு காலக் கவிதை வளர்ச்சியின் காரணமாகத் தமிழ்க்கவிதைக்கு யாப்பு இலக்கண மரபுகள் அமைந்துள்ளன. இவ் யாப்பு இலக்கணத்துக்கு மீறிய நிலையில் புதுக்கவிதைகள் தோன்றுகின்றன. இப் புதுக்கவிதை-உருவத்தை, வடிவத்தைவிட உள்ளடக்க மாகிய பாடுபொருளுக்கு முதன்மை தருகின்றன. இப் பாடுபொருள் செம்மையாக அமைந்திருக்கின்றதா? இன்றைய புதுக்கவிதைகள் புதுக்கவிதைத் துறையின் நிலைபேற்றுக்கு வழி வகுக்குமா? வடிவம் இல்லாக் கவிதைத்துறை நிலைபேறடைய முடியுமா? போன்ற வினாக்கள் பலரால் எழுப்பப்படுகின்றன. இதற்குக் காரணம், எதையும் பாடலrம் என்றும், எல்லாரும் யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்றும் இன்று நிலவும் இன்றைய கவிதைத் துறைப் போக்கு எனலாம். இக் கட்டுரையின்கண் புதுக்கவிதையின் நிலை பேற்றுத் தன்மை குறித்து விளக்கப்படுகின்றது. s புதுக்கவிதைத் தோற்றம் - ஆங்கில இலக்கியத்தில் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்டின் என்பவரால் புதுக்கவிதை தோற்றுவிக்கப்