உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈட்டி முனை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

30 சொல்லவேண்டிய உண்மைகளை ஆணித்தரமாகச் சொல்லுங்கள் உணர்ச்சியுடன் அழுத்தமாக எடுத்து எழுதுங்கள். சொல்லுக்கு உயிர் கொடுங் கள். இவை தான் முக்கியம், இவற்றுக்குக் கட்டுப்பாடுகளும் இலக்கண விதிகளும் பண்டிதச் சட் டங்களும் தடையாக இருந்தால், அவற்றைத் தகர்த் தெறியுங்கள், மனிதருக்காகத்தான் சட்டங்களும் திட்டங்களுமே தவிர, சட்டங்களுக்காக மனிதரல்ல அவசியம் ஏற்படும் போது சட்டங்களைத் தகருங் கள் - இப்படிச் சொல்லும் போது, பெருங் கல்விப் பண்டிதர்கள் குமுறுகிறார்கள். கோபிக்கிறார்கள்! ஆனால் காலம் இவர்களுக்காகக் காத்திருப்ப தில்லை. காலத்துடன் போட்டியிட்டு வளரும் அறி வும், அறிவின் வலிமையான சிந்தனையும், சிந்தனை யின் சிறப்பான இலக்கியமும் இவர்கள் அச்சுறுத் தல்களினால் பம்மிவிடப் போவதில்லை! எழுதுவோம் எனத் துணிந்து விட்டவர்கள். இலக்கியமே உயிர் மூச்சு என்று மதித்துவிட்டவர் கள் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ்' என்பதை இதயஒலியாகப் பெற்றுவிட்டவர் கள் பிறரது கோபத்துக்கோ, பொறாமைக்கோ , புகழ்ச்சிக்கோ, வசைமாரிகளுக்கோ, நட்புக்கோ பகைமைக்கோ அடிபணிந்து விடப்போவதில்லே. அவர்கள் உள்ளம் ஒலிக்கிறது: என் தாய் மொழிக்குப் பழிவந்தால் சகிப்பதுண்டோ? உமை ஒன்று வேண்டுகின்றேன். மாசில்லாத உயர்தமிழை உயிர் என்று போற்றுமின்கள்!' தமிழ் வளர்ப்போம் என்று சொல்லி தறுதலைத் தனம் செய்யும் கயவர்களைக் காயவே முந்துகிறது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/32&oldid=1370285" இலிருந்து மீள்விக்கப்பட்டது