உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா குறிக்கிறது? இதயத்தின் வலிமையை தேவையான இரத்தத்தைக் குறைந்த உழைப்பின் மூலம் கொடுத்து விட்டுத் தேவையான அதிக ஓய்வை இதயம் எடுத்துச் கொள்கிறது என்பதே காரணம்! ஓய்வு எடுத்துக்கொள்வதால் எவ்வாறு வலிமைபெற முடியும் என்ற சந்தேகம் எழுவது இயல்பே அதிகமாக இயக்கம் பெறும்போது, உயிர்க் காற்று அதிகம் தேவைப்படுகிறது. உயிர்க் காற்றில் சேர்ந்து திசுக்கள் எரியும். அதனால் சக்தி ஏற்படும். அதாவது, நாம் உண்ணுகின்ற உணவில் - பாகமானது ஒரு சில தசைகளை இயக்கவும், - பாகம் சக்தியாக மாறவும் பயன்படுகின்றன. - காற்றில் எரிந்து சக்தியைக் கொடுத்தவுடனே, கழிவுப் பொருட்களும் அங்கே சேர்கின்றன. அவைகள் நச்சுத் தன்மையுள்ளவை. இதனால் அவயவங்கள் சுறுசுறுப்பை இழந்து சோர்வடைகின்றன. அந்த சோர்வு போக வேண்டுமென்றால், ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம். ஓய்வின்போது, இரத்தம் கழிவுப் பொருட்களை சிறிது சிறிதாக அகற்றும் பொறுப்பை மேற்கொண்டிருக்கிறது. இதயம் செல்களாலும் திசுக்களாலும் ஆன ஓர் உறுப்புதானே! பயிற்சியால் என்ன பயன் உடலில் நிகழ்கிறது என்ற நிலையை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியத்திலும் அவசியம். - உடற்பயிற்சி செய்யும் பொழுது, உடற்பயிற்சி யானது அதிக உயிர்க் காற்றைக் (Oxgen) கேட்கிறது. உயிர்க் காற்றோ, தங்களைக் கவர்ந்து சென்று