உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உருவும் திருவும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உருவும் திருவும்

13

சம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளியுள்ளார். கூன்பாண்டியன் மனைவியாம் மங்கையர்க்கரசியாரும் அமைச்சர் குலச்சிறை யாரும் விரைந்து சென்று திருமடத்தில் காழிப் பிள்ளையாரைக் காணுகின்றனர். அயல்வழக்கையெல்லாம் தமிழ் வழக்காக ஆக்கிய திருஞான சம்பந்தர்தம் திருக்கோலத்தினைப் பாமணக்கப் பாடும் பாவலர் சேக்கிழார்தம் வாக்கால் கண்டு மகிழலாம்.

ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தைத் தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்குங் கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்.

           -திருஞான சம்பந்தர் புராணம்: 728.
  உருவும் திருவும் ஒளிர்க! வாழ்க!