பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

இது எப்படி ஏற்பட்டது?

பிரபஞ்சத்தின் தலைநாளிலே சூரியன் எப்படித் தோன்றியது என்பதை அறிந்தோம். அந்த வாயுக் கூட்டத்திலிருந்து பல கோளங்கள் தோன்றின என்றும் கண்டோம்.

அப்படித் தோன்றிய வாயு கோளங்கள் சூரியனைச் சுற்றிவரத் தொடங்கின. எதனால்? ஒன்றை ஒன்று இழுக்கும் தன்மையால்.

அப்படிச் சுற்றி வந்த காலத்திலே இந்த வாயு கோளங்களும் ஒன்றை ஒன்று இழுத்தன. அப்போது ஒன்றுடன் ஒன்று மோதின. அதனால் சில பெரிதாயின. சில தொலைவில் ஓடிப்போயின. இப்படி விலகி வந்ததுதான் நமது பூமி.


10. சந்திரன் பிறந்தான்


விலகி வந்த பூமி அனல் கக்கிக்கொண்டிருந்தது. ஒரு வருஷமா? இரண்டு வருஷமா. சுமார் ஐந்நூறு வருஷ காலம்.