உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



யும், அவ்வப்போது நடைபெறுகின்ற மரணச் சடங்குகள், விருந்தினர்களை உபசரித்தல்; மற்றவர்களின் மனம் கவர முயற்சித்தல் போன்ற நேரங்களில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி மகிழ்ந்து, மற்றவர்களையும் மகிழ்வித்தனர் என்பதையும் இலியட், ஒடிசி போன்ற காவியங்களின் மூலம் நம்மால் அறிந்து கொள்ளமுடிகிறது.

இப்படிப்பட்ட போட்டிகள் தனிப்பட்டவர்களுக்கு இடையேமட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட இனத்தவர்கள் மற்றும் நகரங்களுக்கு இடையே கூட போட்டிகள் நடை பெற்றிருக்கின்றன.

நாட்டியம் என்பது மக்களிடையே பிரபலமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

2. ஸ்பார்ட்டன் காலம்

ஸ்பார்ட்டா நகரமானது முழுக்கமுழுக்க இராணுவ ஆட்சி முறையையே பிரதானமாகக் கொண்டிருந்தது. தனிப்பட்ட ஒவ்வொரு குடி மகனும் தன்னைப் பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாமல், நாட்டு நலனிலேயே, நாட்டைப் பலப்படுத்துவதிலேயே நாளெல்லாம் எண்ணியும் உழைத்தும் வந்தனர். மிகவும் கடுமையான இராணுவ ஆட்சி முறையே ஸ்பார்ட்டாவில் நிலைத்திருந்தது. அதற்கும் நாட்டைச் சுற்றியே பல காரணங்கள் சூழ்ந்திருந்தன. அவற்றையும் நாம் காண்போம்.

ஸ்பார்ட்டா நாடானது, அண்டை அயல் நாடுகளையும் நகரங்களையும் ஆக்ரமிப்பதில் பெரும் ஆர்வம் காட்டி வந்தது. ஆதனால், அடிக்கடி சிறு சிறு அண்டை நாடுகளின் மீது போர்