உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器莎 லா, ச. ராமாமிருதம்

கண்ணம்மா, இருக்கிறாயா?" என்றான். அவனுக்குக் கலியாணமானது முதற்கொண்டு, அவளுக்கு நினைவு தெரிந்து, அவன் வாயினின்று வந்த முதற்பேச்சு அதுதான்.

ஆனால், கண்ணம்மா?-அந்தக் கண்னம்மா யார்?

அலன் சாவதானமாய் இரத்தத்தை வழித்து, எழுந்து, ஜன்னலைத் திறந்து, மழை ஜலத்தில் கையை அலம்பிக் கொண்டு, மறுபடியும் வந்து நாற்காலியில் உட்கார்ந்தான்.

அவளுக்குத் திடீரென்று உடல் வெலவெலத்தது. இரத்தத்தைக் கண்ட பயம், துக்கம், சந்தோஷம் இந்த மட்டுக்கும் அவன் வாய் திறந்தானேயென்று. ஆனால் ஒன்றுமே புரியாததினால் ஒரு திகைப்பு-இத்தகைய பல உணர்ச்சிகள் அவளை ஒரே சமயத்தில் தாக்கவே, அவளுக்கு கடைசியில், அழுகைதான் வந்தது. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போலிருந்தது. அவன் கைகள், தன்னை யனைக்க விரும்பினாள். அவளது கண்களை அவன் துடைத் தால்தான் அவளுக்குத் தைரியம் வரும்:

சவா, இப்படி உட்கார்’ என்று அவன் சிரித்துக் கொண்டே சொல்லலானான்: நான் உனக்கு ஒரு கதை சொல்லப்போகிறேன்- என் கதை-நீ அதை எவ்வளவு தூரம் நம்புவாயோ, அது எனக்குத் தெரியாது. ஆனால், என் வரைக்கும், அது நிஜமாய் நடந்ததுதான்-நீ இதைத் தெரிந்துகோள்வதும் அவசியந்தான், கண்ணம்மாளின் வார்த்தை அப்படித்தான்.'"

அவன் குரலில் மது மயக்கத்தின் இனிப்பு-கேட்கக் கேட்கத் தெவிட்டவில்லை. அவன் வாயிலிருந்து என்ன வார்த்தை வரப்போகிறதோ?

நான் சிறு வயதில் மக்கு-ஒரு பதினைந்து வருஷத் துக்கு முந் தின சமாசாரத்தைச் சொல்கிறேன். எனக்கு மொத்து’ என்று ஒரு செல்லப்பெயர்கூட உண்டு. வாஸ்தவ