பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஒளிவளர் விளக்கு

மாகக் கனியைத் தரும். அந்தக் கனி மற்ற மரங் களின் கனியைப்போலவா இருக்கும்? மிக இனிமையாய் உண்டார் உடம்புக்கு உரம் ஊட்டுவதாய் உடம்பையே பொன் மயமாக்குவதாய்-இன்னும் என்ன என்னவோ செய்வதாய்த்தான் இருக்க வேண்டும். கேட்டதெல் லாம் தரும் மரத்தின் கனியினல் எத்தனையோ பயன் உண்டாகும். மரங்களிற் சிறந்தது கற்பகமானல் கனி களிற் சிறந்தது கற்பகக் கணிதானே ?

அவ்வளவு சிறந்த கனியை அல்லவா இறைவனுக்கு உவமையாகச் சொல்லவேண்டும்? உவமை சொல்லும் போது உயர்ந்த பொருளாக எடுத்துச் சொல்லவேண்டு

மென்பது இலக்கணம்.

"உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலே'

என்பது தொல்காப்பியம். உயிருக்கு இனிமையூட்டும் இறைவனுக்கு உவமை சொல்லும்போது நாம் தின்று துப்புகின்ற கனியையா சொல்வது ? கனிகளிலெல்லாம் சிறந்த கற்பகக் கனியைச் சொல்வதுதான் பொருத்தம். சேந்தனர் திருவிழிமிழலையில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமானைக் கற்ப்கக் கனி என்றே சொல்கிரு.ர்.

இந்தக் கனியின் சுவை அறிந்தார் உண்டா? ஆம்; இருக்கிருர்கள். இந்தக் கனியை வாயில்ை, உண்ண இய லாது. மரத்திலே விளைந்த கனியானல் பறித்துக் கடித்து உண்ணலாம். இந்தக் கனியை அறிவினல் உண்ணவேண் டும். அறிவைப் பெருக்கிக் கொண்ட அன்பர்கள் உண்ணும் கனி இது. அறிவு கற்கக் கற்க ஊறுவது. ஆதலின் கற்ற வர்கள் தம்முடைய அறிவிலுைம் உணர்விலுைம் எட்டிப் பிடித்துக் கைப்படுத்து உண்ணும் கனி இறைவன்.

மனம் ஒருமைப்படும்படியும், நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமை உண்டாகும்படியும், மரணமிலாப்