பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ஒளிவளர் விளக்கு

மதில்களையுடைய மூன்று புரங்களுக்குத் தலைவர்களாக இருந்தார்கள். பறக்கும் மதில்கள் அவை. பறந்து சென்று கீழே வந்து மக்கள் வாழும் ஊரின்மேற் படியச் செய்து பல உயிர்களைக் கொல்வதே தொழிலாக இருந்தார்கள், அவர் கள். அவர்களுடைய அசுரச் செயலுக்கு உறுதுணையாக முப்புரங்கள் இருந்தன. பொல்லாத குழந்தை தன் கையில் கத்தியை வைத்துக்கொண்டு குறும்பு செய்யும்போது தங்தை அதன் கையிலிருந்து கத்தியைப் பிடுங்கிவிடுவது போலத் திரிபுரத்து அசுரர்களின் கொடுஞ் செயலேக் கண்டு இறைவன் அப்புரங்களே அழித்தான்; அவர்களே அழிக்க வில்லை. மக்களைச் செற்ற அசுரர்களுடைய புரங்களே இறைவன் செற்ருன்.

செற்றவர் புரங்கள் செற்றளம் சிவனே.

திருவிழிமிழலையில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானத் தரிசித்தபோது இந்த எண்ணங்களெல்லாம் சேந்தனருக்கு எழுந்தன. இறைவனுடைய திருக்கோலத்தைக் காண வேண்டும் என்ற ஆவல் கட்டுக்கு அடங்காமல் அவருக்கு இருந்தது. விழிமிழலைக்கு வந்து கண்ணுல் கண்டார். கருத்திலே அன்பு ததும்பக் கண்டார். உள்ளம் குளிரக் கண்டார். பிறகு கண் குளிர்ந்தது. மனம் கன்ருக இருந்தால்தான் பார்வையும் கன்முக இருக்கும். மனத்தில் பொருமை இருந்தால், கண்ணின் பார்வையிலும் பொருமைத் தீயின் பொறி சுடரும். அன்பு இருந்தால் கண்ணில் அதன் கொழுந்து தண்ணெனப் புலப்படும். இறைவனுடைய தரிசனத்தைக் கண்டு மனம் குளிர்ந்தால், பிறகு புலன்களெல்லாம் குளிர்ச்சியை அடையும். வேரில் நீர் ஊற்றினல் மரத்தின் எல்லா உறுப்புகளிலும் அதன் தண்மை சார்வதுபோல மனத்திலே தண்மை ஏறினால்