பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ஒளிவளர் விளக்கு

னும், சேல்மீன்கள் உலாவும் வயல்களேயுடைய திருவிடைக்கழியில் திருக்குராமரத்தின் கிழவின்கீழ் கின்ற வேல் பொருந்திய வளைந்த கையையுடைய வேந்தனுமாகிய என் சேக்தன், காதல் பொருந்திய மனத்தைத் தக்து என் கையில் உள்ள வளையல்களைக் கவர்ந்து கொண்டான்.

மால் - காதல் மயக்கம், சங்கம் - சங்கால் ஆன வளே. அவனே கினேந்து உருகி மெலிந்தமையால் கைவளைகள் கழுவின; அதற்கு அவன் காரணமாதலின் சங்கம் வவ்வின்ை என்ருள். மலைமகள் - பார்வதி. மதலே - பிள்க்ள. சேல் - சேல்மீன். குரா ஒரு மரம்; திருவிடைக் கழித் தல விருட்சம். தடக்கை - வளைந்த கை விசால மான கையுமாம். சேந்தன் - செங்கிறமுடையோன். மெல்வியல் . மென்மையான இயல்பையுடைய பெண்.)

முருகனைப் பற்றிச் சேந்தனர் பாடியது இது. தன் மகள் கிலேகண்டு கற்ருய் இரங்கியது போலப் பாடியது. தலைவனுடைய பெயரைச் சொன்னமையால் இது புறப் பொருளில் பாடாண் திணையைச் சார்ந்தது,

திருவிடைக்கழி என்பது சோழ நாட்டில் உள்ள தலம். இதற்குத் தேவாரப்பதிகம் இல்லே. இங்கு எழுந்தருளிய முருகன்மீது திரிசிரபுரம் மகாவித்துவான் பூ மீனுட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் ஒரு பிள்ளைத்தமிழ் பாடி இருக்கிருர்,

இது சேந்தனர் பாடிய திருவிசைப்பாவில் 8-ஆம் பதிகத்தில் உள்ளது.