28
ஓ ! ஓ ! தமிழர்களே !
இவர்கள் எப்படி இருந்தாலும் கவிழ்க்கப்
படுவார்கள் என்ற நிலையே இந்தியாவில்
உள்ளது
எத்தனைப் பெரிய தமிழன் தலைவனாக வந்தாலும் சரி, எந்த நிலையிலே, மேலோங்கி இருந்தாலும் சரி, 'தமிழாய்ந்த தமிழ் மகன்தான் தலைமகனாக வர வேண்டும்' என்றில்லை. அருமை மிகுந்த அரு.கோபாலன் அவர்கள் சொன்னார்கள் . காமராசர் என்ன அரசியல் மேதையா? அரசியலிலே பெரிய பட்டம் - பெற்றவரா? அல்லது கல்வியிலே மிகப்பெரிய படிப்புப் படித்தவரா? ஆனாலும். அவர் தமிழ் உணர்வோடு இருந்தார். வடநாட்டிற்கு என்றும் நாம் தாழ்ந்து போய்விடக் கூடாது, விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்ற தன்மான உணர்வு, தாம் பேராயக் கட்சிக்காரராக இருந்தாலும், அவரிடம் இருந்தது. எனவே, அவருடைய ஓர் இசைவுக்காக வடநாட்டுத் தலைவர்கள் காத்துக் கிடந்தார்கள். இப்போது அப்படி இல்லையே: நிலைமை தலைகீழாக மாறியும் கூட, நம்மை அவர்கள் ஆட்சியில் வைக்க விரும்பவில்லையே! நூறு முறை நடந்தாலும், நூறுமுறை அவர்கள் உறுதி கொடுத்தாலும், நொடிப்பொழுதில் இவர்கள் வீழ்த்தப்படுவார்கள் என்பதற்கு, ஒரு முறையா, இரண்டு முறையா தமிழ்நாட்டில் - நான்குமுறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது.
திராவிடக் கட்சி ஆட்சியிலமர்ந்து என்ன பயன்?
எனவே அரசியலிலே பெரியாரைப் பிரிந்து கொண்டு. துறந்து கொண்டு. அவர் கருத்தை மறுத்துக் கொண்டு இந்தத் தமிழ்நாட்டை நாம் மீட்டுவிட