உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

33

கிறோம்' என்கிற தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, நீங்களே முதல்வர் பதவியிலிருந்து நீங்கிச், சட்டமன்றத்தைக் கலைத்து வெளியேறுங்கள் என்று சொன்னேன். ஆனால் அதன்படி அவர்கள் செய்வார்கள் என்று எதிர் பார்க்கவும் முடியாது, கனவு காணவும் முடியாது. எனவே இந்த ஆட்சி கலைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சி வந்தது. என்ன நடந்தது! மீண்டும், மீண்டும் பழைய வரலாறு. மீண்டும் மீண்டும் பழைய நிலை: மீண்டும் நமது பழைய திராவிட ஆட்சி மலரும் என நம்பிக்கொள்ளக்கூடாது. இது நான் தெளிவாக இந்த உலகத் தமிழின மாநாட்டிலே கூறுகின்ற உறுதிமொழி

திராவிட உணர்வுபோய்
தமிழினவுணர்வு வரவேண்டும்

{gap}}ஏன் சூழ்நிலைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன? தமிழனுக்கு இருந்த உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி, மழுங்கிக்கொண்டிருக்கின்றன. பெரியார் காலத்திலே இருந்த உணர்வு வேறு, இப்பொழுது இருக்கிற உணர்வு வேறு அந்த உணர்வை நாம் வளர்த்துக் கொள்ளவில்லை; அந்த உணர்வை இழிபடுத்திக்கொண்டோம். இன்றைக்குப் பெரியாரியம் பேசுபவர்கள், பேசியவர்கள். தமிழின உரிமைக்காக பேசியவர்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்? இப்போது எதிரிகளிடத்தில் ஆட்பட்டு இருக்கிறார்கள். அவர்களுடைய அரசியல் வலைக்குள்ளே விழுந்து சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இன்றைய நிலையில் நாம் நினைக்கிற அளவிலே, தமிழினம், திராவிட உணர்வுள்ளதாக இருக்கக் கூடாது. தமிழின உணர்வுள்ள இனமாக இருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/43&oldid=1163317" இலிருந்து மீள்விக்கப்பட்டது