உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



14

நிமிர்ந்து, சூரிய ஒளி காரணமாகக் கண்களை மூடிமூடி முழித்தபடி அவற்றையே கவனிப்பான். பிரிந்த உதடுகளில் தவழும் புன்னகையிலே பொறாமையும் வருத்தமும் கலந்து தானிருக்கும். எனினும் மண்ணுலகத்து உயர்ந்த கிருஷ்டி சிதறும் தாராளச் சிரிப்பு அது.

        மாகதப் பசும் பல்லி ஒன்றைப் பயமுறுத்தி ஓட்டுவதற்காகக் கைகளைக் கொட்டிக் கொண்டே 'ஓஹி.!' என்று கத்துவான் அவன்.
        கடல் கண்ணாடி மாதிரிக் களங்க மற்றிருக்கும்போது, பாறைகள் மீது அலைகளின் வெண்ணுரை படியாதிருக்கும் போது, தெளிந்த நீரிடையே தன் ஒளிக்கண் வீசி ஒரு கல் மீது அமர்த்திருப்பான் பெப்பி. நீரினுள் கிடக்கும் செங்கிண்ணங்கள் போன்ற பாசிகளிடையே நீந்திக் களிக்கும் மீன்களை, அங்குமிங்கும் ஆடிஓடி மகிழும் கடற்பூச்சிகளை, பக்கவாட்டிலே நகர்த்தசையும் கண்டுகளை யெல்லாம் பார்த்திருப்பான். கொலுவிருக்கும் அமைதியினூடே; நீலநெடுங்கடல் மேலே, எங்கும் தவழ்ந்து ஒலிக்கும் அச்சிறுவனின் தெள்ளிய தீங்குரல். 
        'கடலே, ஓ கடலே...'
        பெப்பியைப் பார்த்துப் பெரிய மனிதர்கள் வெறுப்போடு தலையாட்டுவார்கள். 'இந்தப் பயல் அடங்காப் பிடாரியாகத் தான் வளருவான்' என்பார்கள்.
        ஆனால், அதிக தீர்க்க தரிசனமுடைய நல்ல மனிதர்கள் சிலரது அபிப்பிராயம் வேறு விதமாகயிருக்கும். 'பெப்பி தான் நமது வருங்காலக் கவிஞர்' என்பார்கள்.
         மாச்சாமான்கள் செய்யும் பாஸ்காலினோ இருக்கிறரே, வெள்ளியில் வார்த்து எடுத்தது போன்ற தலையும் புராதன ரோமன் நாணயத்திலே அச்சிட்டிருந்தது போன்ற முகமும் பெற்ற கிழவர், - எல்லோராலும் போற்றப்படும்