பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


இனி, கணினி கலைச்சொல்லாக்கத்தைப் பொறுத்தவரை நான்மேற்கொண்டு வரும் வழிமுறைகள் சிலவற்றைப் பற்றி விவாதிக்க விரும்புகிறேன்.

எனது கணினி அகராதிகளை வெறும் ஆங்கில-தமிழ்க் கலைச்சொல் பட்டியல்களாக (Glossaries) அமைக்காமல், களஞ்சியத்த ன்மையும் அகராதித் தன்மையும் ஒருங்கியைந்த, 'களஞ்சியஅகராதி'களாக அமைத்து வருகிறேன். காரணம், அவை சொல் விளக்கமும் பொருள் விளக்கமும் ஒருங்கிணைந்து படிப்போருக்கு தெளிவைத் தரவேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கம். அதற்காக ஒரு ஆங்கிலக் கலைச்சொல்லுக்கு இயன்றவரை பல கலைச் சொற்களைத் தருகிறேன். சான்றாக,

    Data  : தகவல், தரவு, விவரம், செய்திக் குறிப்பு.
    Mouse : கட்டி, கட்டுக் கருவி, சுட்டுப்பொறி, கட்டு துண்பொறி.
    Key  : விசை, திறவு, விரற்கட்டை, குமிழ், சாவி
    Pixel : படக்கூறு, படப்புள்ளி, படத்துணுக்கு.

இதில் ஏதாவது ஒரு சொல் நிலைபேற்றுத் தன்மையைப் பெறாதா என்ற எண்ணமும் நாளை தரப்படுத்தம் செய்ய விழையும்போது, ஒப்பீட்டாய்வு செய்வதற்கும் ஒன்றிற்கு மேற்பட்ட சொற்கள் தேவைப்படுமே என்பதும் காரணங்களாகும்.

கணினித்துறை போன்ற அறிவியலுக்கான கலைச்சொல் உருவாக்கத்துக்கு இலக்கியத் தரமான சொற்களைப் பயன்படுத்த சிலர் விழைவதில்லை. உரிய பொருளை விளக்க அவைகளால் இயலாது என்று கருதப்படுகிறது. ஆனால், தக்க மாற்ற திருத்தங்களுடன் பயன்படுத் தினால் கருதிய பொருளைத் திட்ப, நுட்பமாக விளக்க முடியும். சான்றாக,

    Jergon  : குழுஉச் சொல்
    Slug  : பருங்குழை
    Finesse  : நய நுட்பம்
    Hosț  : ஒம்புநர், புரவலர்
    Malfunction : பிறழ்வினை

என அமைக்கலாம்.