பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெளர்ணமி அன்று இரவு ஒன்பது மணி ; அவள் நினைவற்று விழுந்தாள். அந்தச் செய்தியைச் சிவசுப்பிர மணிய பிள்ளைக்கு யாரோ சொன் ஞர்கள். அவர், அவள் இருந்த இடத்துக்கு ஓடிச் சென்ருர். அவளது நிலை வெகு மோசமாய் இருப்பதைக் கண்டார். கன்னியாகுமரி யிலிருந்து ஒரு மருத்துவரை அழைத்து வந்தார். மருத் துவர் அவளைப் பரிசோதனை செய்து விட்டு "அம்மா இறந்து நேரம் ஆகிவிட்டதே" என்ருர். அவள் இறைவனடியில் இணைந்து விட்டாள் என்ற செய்தி பரந்தது. மறுநாள் நாகர்கோவில் போட்டோ கிராபர் செல்லையா வந்தார் ; கொட்டாரம் அன்பர்களும் கூடிஞர்கள். அந்த உடலைச் சமாதியில் வைக்கப் போகின்றனர் என்ற செய்தி கேட்டு அக்கம் பக்கத்து ஊரிலுள்ளவர்க ளும் வந்தனர். பூம்பல்லக்கில் அவள் உடலை வைத்து பேண்ட் மேளங்கள் முழங்க ஊர்வலமாக ஊருக்கு வெளியே எடுத்துச் சென்றனர். கொட்டாரத்தின் வடக்கே புத்த றுை கால்வாய்க்குத் தெற்கே உள்ள இடத்தில் அவளைச் சமாதி வைக்க வேண்டும் என்பது ஊர் மக்க எளின் முடிவு. இடத்தைத் தேர்ந்தெடுத்த அன்பர்கள் சமாதிக் குரிய குழியையும் தோண்டினர் ; மற்ற ஏற்பாடுகளை யும் செய்தனர், பூம்பல்லக்கு சமாதி வைக்க வேண்டிய இடத்துக்குச் சென்றது. குழியின் அருகே சப்பரத்தை இறக்கி வைத் தனர். அந்த நேரத்தில் அங்கு திருவிதாங்கூர் மகா ாாஜாவின் அதிகாரி ஒருவர் வந்தார், அரசாங்கத்திற்கு உரிமையான இடத்தில் அ ர சி ன் அனுமதியின் றிப் பிணத்தைப் புதைப்பது தவறு என் ருர்,