16
கன்பூசியஸின்
பிறருக்கு நீங்கள் சொல்லும் விஷயங்களை, நிதானமாக கவனித்துக் கூறுவீர்களேயானால், கூடுமானவரை தவறுகள் நேராவண்ணம் நாம் தவிர்த்துக் கொள்ள முடியும்.
அதனால் பிறரிடம் எந்த விஷயத்தையும் கூர்ந்து, அக்கரையோடு கேளுங்கள்! அவற்றில் அபாயம் உள்ள சம்பவங்கள் இருந்தால் வெறுத்து விடுங்கள்; எனவே, எத்த விஷயத்தையும் பொறுமையாக, நிதானமாகச் செய்யுங்கள். பின்னொரு நேரத்தில், ஐயோ இப்படி நடந்து கொண்டோமே என்று உங்களுடைய செயல்கள் பற்றி நீங்களே வருந்திக் கொள்ளும் நிலைகளைத் தோற்றுவித்து விடாதீர்கள்.
ஆட்சியிலே இருப்போரின் சட்டங்கள், மக்களின் வாழ்க்கையை நெறிப்படுத்தும் வகையில் இருக்கவேண்டும். சட்டத்தை மீறினால் தண்டனை உறுதி என்ற அச்சம் மக்கள் உள்ளத்திலே பதியவைக்கும் சட்டங்களை அவர்கள் இயற்ற வேண்டும்.
பிறருடைய தவறுகளையும், குற்றங்கனையும் விவரித்துக் கூறிக்கொண்டே இராதே. அதைவிட உன்னையே நீ எண்ணிப்பார்; உன் குற்றங்களை உற்று நோக்கித் தவிர்த்துவிடு! அதுதான் சிறந்த வழி!
இயற்கையால் உண்டாகும் துன்பத்தைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், உங்களுடைய தவறுகளால் உருவாகும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளவே முடியாது.
அதுபோலவே, இன்பத்தையும், ஓய்வையும் தேடி அலைந்து கொண்டிருக்காதீர்கள்; அப்படி, நீங்கள் ஒரு வேளை அடைந்தால் அவை நிச்சயமாக உங்களது கைப்பிடிக்குள் அகப்படாது.