ராஜம் கிருஷ்ணன் II
தவிர ஒரே முதிய ஆண்மகனான அங்கே செய்நத்து’சி செய்பவன், ‘சாமியார் என்றழைக்கப் பெறும் கண்ணு சாமிதான். அவன் மருதாம்பாளின் புருஷன்.
ஏத்தா இது ரிக்காடு டான்சில்ல குதிக்குறாளுவ... மெதிச்சுத் துவயிங்க! விருசா ஆவட்டும்! சாமியாரே, ஒமக்கு இது சரியல்ல. நீரு வாரும். சிப்சம் எடுத்துப் போட...” என்று கங்காணி அவனை நிறுத்தித் தோளைப் பற்றி அழைத்துச் செல்கிறான்.
உட்சூடும் வெளிச்சூடும் சங்கமித்துக் கால்களில் நெருப்பைக் கக்குகின்றன. நெருப்புப் பந்தத்தில் நெருப்பு வளையத்தில் ... அவர்கள் நடக்கிறார்கள். நடப்பு இல்லை.மிதித்தல், பையன் வாளியில் நீரெடுத்து அவ்வப் போது மண்ணில் விசிறிக் கொட்டுகிறான். அந்த நீர், அவர்கள் காலடிகளில் பாயும் போதே ஆவியாகிவிட, தேய்ந்து வெண் குறுத்தாகிவிட்ட அவர்கள் அடிகளில் கொப்புளத்தைத் தோற்றுவிக்கும் கொதிப்பைக் கக்கு கிறது. அழுத்தமும் குடும் மண்ணை மெத்து மெத்தென்று வெண்ணையாக குழைத்த பிறகு கெட்டித்து இறுகச்செய்யும் நிணமும் சதையும், பூவின் மென்மையுமான பெண்மையின் துடிப்புக்களும் இறுகிக் கெட்டித்துக் காய்ந்து போகும் இந்தச் “செய்நேர்த்தி’ தை, மாசி முழுதும் கூட நீண்டு போகும்.
மருதாம்பா, சற்றே தலைதுாக்கி, கல்யாணி, தன் புரு வடினை அழைத்துச் செல்வதைப் பார்க்கிறாள். சென்ற ஆண்டு வரையிலும் சாதாரணத் தொழிலாளியாக இருந்த சுப்பன் இப்போது கங்காணியாகி விரட்டுகிறான். மிஞ்சி னால் முப்பது வயசிருக்கும். கணக்கப் பிள்ளைக்கு அவ்வப் போது கையும் மனமும் நிறையக் காணிக்கை வைத்தி ருப்பான். கங்காணியாகி விட்டான். செய்நேர்த்திக் காலத்தில் நிர்ணயக்கூலி முழுவதையும் கொடுக்க மாட் டார்கள். உப்பெடுக்கத் தொடங்கி விட்டாலும் அந்த அளத்தின் இருநூறு ஏக்கரிலும் பண்பாட்டு வேலை முடிய