பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

நிற்பதைப் போல, அந்தக் காலத்தில் கழகம் என்னும் சொல் பல இடங்களையும் சுட்டி நின்றது என்பதையும் ஈண்டு சுட்டாமல் விடமுடியவில்லை.

கலைக்கழகம்

இந்த அடிப்படையுடன் கம்பராமாயணத்திற்கு வரு வோமே யானால், கம்பன் கழகம் அதாவது கம்பன் கண்ட கழகம், ஒருவகை விளையாட்டரங்கம் (SPORTS CLUB) போலவும் தெரிகிறது; அதுமட்டுமா படைக்கலப் பயிற்சிபெறும் ஒருசார் மறக்கலைக்கூடமாகவும் (இராணுவக் கல்லூரியாகவும்) தோன்றுகிறது. அம்மட்டுமா? பல்வேறு கல்விக் கலைகளை ஆராய்ந்து கற்கும் கல்விக் கூடமாக (University) எண்ணவும் இடம் அளிக்கிறது.

கம்பன் கண்ட கழகத்தில் கலை தெரிபவர்கள், மயிலை ஊர்தியாகக் கொண்ட முருகன் போன்றவர்களாம். அங்ஙனமெனில், அவர்கள் இளைஞர்கள்-அழகு மிக்கவர்கள்-ஆற்றல் உடையவர்கள்-அன்பு மணம் கமழ்பவர்கள் அல்லவா? அவர்தம் பயிற்சி சிறந்ததாகவே இருக்கும்-அவர்கள் பயிலும் இடம் உயர்ந்ததாகவே இருக்கும். அந்தக் கழகம், தெய்வ முருகனது திருக்கோயில் போன்று போற்றுதலுக்கு உரிய உயரிடமாகும்.

இலை மறை காய்

இங்கே, கலைக்கழகம் உடையதாகக் கம்பர் கூறும் கோசல நாட்டிற்குள் இலைமறை காயாகத் தமிழ் நாடு மறைந்திருக்கிறது என்பது நினைவுகூரத்தக்கது. கம்பன் தான் கண்ட தமிழ் நாட்டையே கோசல நாடாக மாற்றிக்காட்டியுள்ளான் என்னும் பேருண்மையைக் கம்ப ராமாயணத்தை ஆழ்ந்து கற்றவர் அறிவர். மற்றும் வைணவ இராம காதையில் சைவ முருகன் இடம் பெற்