உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கல்யாணம் இன்பம் கொடுப்பதா-இன்பத்தைக் கெடுப்பதா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 15

இணைத்திருந்தால் உண்மை அன்பு பூத்து வாழ்வு மணமுள்ளதாக இடம் உண்டு.

 இன்று கல்யாணம் வாழ்க்கை நலனை பாதிக்க வாய்த்த திட்டமாக மாறிவிட்டது போலவே, நல்லதுக்காக அமைந்த கட்டுப்பாடுகள் பலவற்றுடனும் அநாவசியமான தர்ம நியாயங்கள் பலப்பல சேர்ந்து அனைத்தையும் மோச நாச விதிகளாக மாற்றி விட்டன.
 'கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிரு. பார்த்துக் கேட்டு தீர்க்கமாக யோசித்துத்தான் முடித்து வைக்க வேணும்' என்ற பேச்சுக்குக் குறை வில்லை. ஆனால் நடப்பது நேர்மாறாகத்தான்.
 குறைபாடுகளை கவனியாமல் 'எல்லாம் பழகப் பழகச் சரியாகி விடும்' என்று அலட்சியம் செய்து விடுகிறார்கள். அதனால் மனித வாழ்வு தேடிச்சோறு நிதம் தின்று, பின் கூடிப்பேசி மகிழ்ந்து உறங்கி, 'பிள்ளையோ பிள்ளை' என்று பெற்றுத்தள்ளி உழலும் பரிதாபகரமான வேதனை வாழ்வாகவே போய் விட்டது. பெரும்பாலோர் மனித மிருகங்களாகத் தான் வாழ்கிறார்களே தவிர, நல்ல மானிடராக வாழவில்லை.
 மனிதர்களாக வாழட்டும் மக்கள்; மனித சமுதாயம் உயர்நிலை எய்தட்டும் என்று விரும்புகிற சிந்தனையாளர்கள், முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையான சமூகக் கட்டுப்பாடுகள், தார்மீக முறைகள் எல்லாமே அழிக்கப்பட வேண்டும்; புதியதோர் சமுதாயமுறை பூக்க வேண்டும் என்று விரும்புவதில் தவறில்லை.