பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



xiii

கொடுத்தலால் இவருடைய பேருரைகள் மாணாக்கரிடம் அகத் தெழுச்சியை உண்டுபண்னி உளவியலில் தனி நாட்டம் ஏற்படச் செய்யும்; ஆழ்ந்து கற்கவும் தூண்டும். இவற்றால் பெரும்பயன் பெற்றவன் அடியேன். இவருடைய ‘பேருரைகள்’ இன்னும் என் செவியில் ஒலிப்பன போன்ற பசுமையான உணர்வு உண்டாகின்றது. இத்தகைய பெரும் பேராசிரியருக்கு இந்நூலை அன்புப்படையலாக்கி மகிழ்கின்றேன்.

என்னுடைய நெஞ்சில் நிலையாக இடம் பெற்றவன் ‘வேங்கடம் மேவியவிளக்கு’எப்படி இடம் பெற்றான் தெரியமா?

பனிக்கட லில்பள்ளி கோளைப்
பழகவிட்டு ஓடிவந்து, என்
மனக்கட லில்வாழ வல்ல
மாய மணாளநம்பி.?

[1]

இன்னும் அவன்,

அரவத்து அமளியி னோடும்
அரவிந்தப் பாற்கட லோடும் அரவிந்தப்
பாவையும் தானும்
அகம்படி வந்து புகுந்து
பரவைத் திரைபல மோதப்
பள்ளி கொள்கின்ற பிரான்
[2]

1960–முதல் இவன் காட்டும் ஒளியில் வாழும் அடியேனுக்கு எண்ணற்ற தொல்லைகளையும் துன்பங்களையும் தந்தாலும், நல்ல உடல் நலத்தையும் மனவளத்தையும் அருளி வருபவன். அவனருளால்தான் இன்றுவரை நூலுலகில் ஆழங்கால் பட்டுப் பலதுறை நூல்களைத் தொடர்ந்து எழுதி வருகின்றேன்; என் கல்வித் தொண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இங்ஙனம் என்னைப் பல்வகைத் தொண்டுகளில் ஆளாக்கி வைத்து எனக்குப் பலவித நலன்களையும் அருளிவரும் அப் பெருமானை மனம் மொழி மெய்களால் வாழ்த்தி வணங்கி அவன் கழலிணைகளையே சரணமாகக் கொள்ளுகின்றேன்.

அன்பர்பணிசெய்யன்னை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலை தானே வந்து எய்தும் பராபரமே..?
[3]

——தாயுமான அடிகள்.

வேங்கடம் AD. 13, அண்ணாநகர் சென்னை-600 040

                                                   ந. சுப்புரெட்டியார்

20-12-1985 -


  1. 7. பெரிவாழ். திரு. 5,4:9.
  2. 8. ௸ 5, 2: 10.
  3. 9. தா. பா: பராபரக்கண்ணி-155.