óのの22 ダの。多 óの2多
"கிளி" என வருமிடத்து (அக் கிளியின் ஒலிவெளிப் பாட்டுச் செப்பத் தெளிவு குறிக்கும் வகையிலாகச்) 'செஞ் சொல்” என்றவாறு முன் அடையிடுதலும் (காண்க : செஞ்சொல் கிளியாய் (25), "குயில்" என வருமிடத்து 'அஞ் சொல்” என்ற வாறு முன் அடையிடுதலும் (காண்க : அஞ்சொல் குயிலாய் (26) போன்ற தெண் காட்சிகள் இவ் இலக்கியத்துள் பல்லிடத்தமைந்துள்ளன!
காளை மாட்டின் மிக மிக நீண்ட கொம்புகள் உடைமையைச் சுட்ட வேண்டிய ஓரிடம்!. நெட்டை - நெடும் - நீள் என்றவாறான எளிய சொற்களைக் கொண்டே தெளிய அடுக்கி "நெட்டை நெடுங்கொம்பு நீள் காளை மாடு.” (864) என்னுமாறு மிக இயல்பாக அமைத்துள்ள் அவ்வரியினுள் - கருத்தொன்றை வலிமையுறச் செய்தற்குச் சொற்களை மென்னுட்பமாகப் பயன்படுத்தும் ஐயா அவர்களின் அரிய உத்திமுறையும் பதிந்துள்ளமையைக் காணலாகும்.
மொழி ஞாயிற்றின் பாவலரேறு
பாவலரேறு ஐயா அவரகள் சொல் தெரிதல் வல்ல திறத்தினராதலின்,- சொல்லின் வேர்ப்பொருள் நாட்ட ஈடுபாடும் தெளிவும் அவரின் எழுத்தோட்டங்களிடையே மிக இயல்பாகக் காணப்பெறுவன! இப் பாவியத்தில் பயன்ப்டுத்தியுள்ள சொற்கள் சிலவற்றின் முன்னிடாகப் பதித்துவைத்துள்ள அடைகளிலும் - அணிப்படுத்தச் எளிலும் அவரின் வேரடிப்படைச் சிந்தனை டங்கிளின் தெளிவும் எழிலும் அருமையாகப் பதிவுற்றுள்ளன்! அவ் வெளிப்பாடுகள் நுண்ணிய போக்கின!
-கசு