உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் பாராயணமும் செய்வதென்று ஏற்பாடு. இதனால் கற்றவை மறவாமலிருப்பதோடு நாட்டிற்கும் நன்மை விளையும் என்று கூறினார் மாம்பள்ளம் சுவாமி. அதன்படி திருவீதி வலம் வருதல் அன்று மாலையே தொடங்கப் பெற்றது. நாடோறும் பின்மாலை வேளைகளில் செய்யப் பெற்று வந்த வேத பாராயண குழுவைச் சேவிப்பதற் கென்றே பலர் வெளியூர்களிலிருந்து வருவார்கள். இடைவிடாமல் பல்லாண்டுகள் நடை பெற்று வந்த இந்தக் கைங்கரியம் 1964-இல் (சுவாமிக்கு இதயக் கோளாறு வந்த பிறகு) நிறுத்தப்பட நேர்ந்து விட்டது. நம்பிள்ளை சந்நிதி : வேதாத்யாயத்திற்கென்று ஒரு பாடசாலையை நிறுவியதுபோல அதிலேயே நம்பிள்ளைக்கு" ஒரு சந்நிதி ஏற்படுத்த வேண்டும் என்பது நம் சுவாமியின் பேரவா. ஆனால் அப்போது ஆசை நிறைவேறவில்லை. 1939-40 இல் சந்நிதித் தெருவில் ஒரு மாளிகையை விலைக்கு வாங்கி அதனை நம்பிள்ளை சந்நிதியாக்கினார். இந்தச் சந்நிதியில் நம்பிள்ளையோடு வடக்குத் திருவீதிப் பிள்ளையும் பெரியவாச்சான் பிள்ளையும்’ எழுந்தருயுள்ளனர். கார்த்திகை மாதத்தில் நம்பிள்ளைக்கு 10 நாட்கள் உற்சவமும் வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கு ஆனி மாதம் 5 நாட்கள் உற்சவமும், பெரிய வாச்சான் பிள்ளைக்கு ஆவணி மாதம் 5 நாட்கள் உற்சவமும் தவறாது சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இவற்றைச் சிறப்பாகப் பரிபாலிக்க சென்னபுரி ஆஸ்திக ரீவைணவ சமிதி' என்ற நிறுவனத்தால் நிர்வகிக்கப் பெற்று வருகின்றது. 6. நம்பிள்ளை - முப்பத்தாறாயிரப்படி வியாக்கியான ஆசிரியர் - ஈட்டாசிரியர் என்றும் வழங்கப் பெறுபவர். 7. நம்பிள்ளை சபையில் சாதித்ததை ஏட்டில் எழுதி உபகரித்தவர். இது ஈடு’ ஆக வெளியிடப் பெற்றது. 8. நாலாயிரத்திற்கும் வியாக்கியானம் படைத்தவர்.