பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

இவர்கள் செயல் புரிகிருர்கள். எல்லா வீதிகளிலும் போலிஸ்காரர்கள் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிருர்கள். உலகத்தின் சக்தி மிக்க கொள்ளேக்காரர்களான "பணக் கார இன'த்தின் கலாசாரம் எப்படி மக்களின் மனிதப் பண்பை அகற்றி, வேறு பட்டவர்களிடையே ஒருமைப் பாடு” ஏற்படுத்தி விடுகிறது என்பதைக் கண்டதும் அதன் ஆற்றல் மீது மைக்கு மரியாதை கலங்த வியப்பு உண்டா கிறது. .

ஒழுங்கின் சக்தி மிகுந்த அந்த உங்து கோல்-போலீஸ் காரனின் கை- வண்டிகளையும், மோட்டார்களேயும், சுமை கிறைந்த வண்டிகளையும் மூடுபனிக்குள்ளே யிருந்து வர வழைக்கிறது. ககரத்தின் நாசம் இன்னும் வக்து விட வில்லை என்ற கம்பிக்கையைத் தூண்டியவாறே அவற்றை மீண்டும் அனுப்பிவிடுகிறது. மோட்டார் கார்கள் மிருது வாக வழுக்கி ஓடி, வெளிச்சமும் ஈரமற்ற கதகதப்பும் கிறைந்த வீடுகள், கடைகள் ஆகியவற்றின் வாயில்களே கெருங்குகின்றன. அவற்றிலிருந்து, நீளத் தொப்பிகளே அல்லது விதம் விதமான தலை அணிகளைத் தரித்து, மிகுந்த விறைப்போடும் மிக உருண்டையாகவும் விளங்குகிற கன வான்கள் கீழே இறங்குகிருர்கள்; அவர்கள் மரியாதை யோடும் பெருமிதத்தோடும் தங்கள் கைகளே, வெகு நேர்த்தி யான பெண்களின் பக்கம் நீட்டுகிருர்கள். அப் பெண்கள் சிரிப்புடனும் இசை போல் ஒலிக்கும் வியப்புச் சொற்களோ டும். அவர்களுடைய பளிங்கு முகங்களில் வெறுப்பைத் தரக் கூடிய அவலட்சன இளிப்போடும், தங்கள் அழகிய பாதங்களை ஈரம் படிந்த அஸ்பால்ட் தளத்தின் மீது அல்லது கல்லால் ஆன கடைமேடை மீது எடுத்து வைக்கி முக்கள். உடனேயே, போஜனப் பிரியன் ஒருவன் சிப்பிப் புழுக்களே விழுங்குவதுபோல,கடைகள் அவர்களே விழுங்கி விடுகின்றன.