உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காலத்தின் குரல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவசு: 23 அந்தஸ்து, புதிய சோதனைப் படைப்பு முயற்சி போன்றவற்றை பலியிட்டு, சகட்டு மேனிக்கு சராசரி எழுத்துக்களின் உற்பத்தியை பெருக்கினர்கள். பத்திரிகைகளின் வாணிபப் போக்கு எழுத்தானர்கள் ஒரு சிலருக்கு ஸ்டார் தனத்தை சம்பாதித்துக் கொடுத்துள்ளது இலக்கியம் போதுமான வளர்ச்சி பெறவில்லை. எழுத்தாளர்களுக்கும் சமூக நோக்கு வேண்டும்' சமுதாயப் பார்வையோடு படைப்பு இலக்கியம் உரு வாக்க வேண்டும் என்ற விழிப்பு விடுதலைக்குப் பின்னரே வளர்ச்சியுற்றது. எக்காலத்திய சகபடைப்பாளிகள் உங்கள் மனதை ஈர்த்தார்கள்? காரணம் கூற முடியுமா? நான் எனது இலக்கிய நோக்குக்கு வரம்புகள் கட்டிக் கொண்டதில்லை. என் ரசனைக்கு வேலிகள் அமைத்துக் கொள்ளவில்லை. எதை வேண்டுமானுலும் எழுதி லாம், எப்படியும் எழுதலாம்; ஆல்ை, எழுதப்படு கி ற ைவ தசமானவையாக, கலைத்தன்மையோடு விளங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு ஆகவே, நயமான எழுத்துக்கள், யாரால் எக்காலத்தில் எழுதப்பட்டவையாயினும், என்னை ஈர்க்கும் சக்தி பெற்றனவாகவே இருக்கும். மணிக்கொடி எழுத்தாளர்கள் கதைகள் என்னே வசீகரித்தன. கல்கி'யின் நல்ல கதைகளை நான் ரசித்தேன். என் கால எழுத்தாளர்களான ரகுநாதன், கு, அழகிரி சாமி, தி. ஜானகிராமன், கரிச்சான்குஞ்சு, ராஜ