34 முதல் தலைமுறையில், குமுதினி, குகப்பிரியை, அனுத் தம என்று சொல்லலாம். இவர்கள் கூட பிரமாதமாக இலக்கிய சாதனை புரிந்துவிடவில்லை. வை. மு. கோதைநாயகி அம்மாள் வாரிசாக லகஷ்மி" எழுதிக் கொண்டிருக்கிருர் என்று சொல்லலாம். அடுத்த வரிசையில், ஆர். சூடாமணி சிறுகதைகளில் சாதனை காட்டியிருக்கிருச். ராஜம்கிருஷ்ணன் நாவல் கன் பல எழுதியிருக்கிருர் ராஜம்கிருஷ்ணன் வாழ்வின் வெவ்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்க்கைப் பிரச்னைகளே நாவல்களுக்கு விஷயமாக எடுத்துக் கொண்டிருக் கிருள்; குறிப்பிட்ட இடங்களுக்கே போய், சில மாதங் கன் தங்கி, ஸ்டடி பண்ணி எழுதுகிருர் என்பதுக்காக விசேஷமாகப் பாராட்டலாம் ஆகுலும், அவர் படைப் புகளில் கலேதயத்தை விட, தொழில் திறமையை (Craftmanship தான் அதிகம் காண முடிகிறது இன்று எழுதிக் கொண்டிருப்பவர்களில், இந்துமதி தவவில் நம்பிக்கை காட்டுகிருர் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. ஆளுல், 'வரி வர மாமியார்- என்ற கதையாகிவிட்டது. வாஸந்தி, அனுராதா ரமணன் படிக்கக்கூடிய கதைகள் எழுதுகிருக்கள். அம்பை புதுமையான, இலக்கியத்தரமான கதைகள் எழுதினர். அஸ்தமித்து விட்டார் போலும் ரொம்ப காலமாக இவர் எழுத்து எதையும் காணுேம். கவிதையில் தனித்துவம் காட்டி மேலோங்கி முன் னேறிய பெண் யாருமே இல்லை. அகிலன், நா. பா. இவர்களை விட, க. நா சு , தி. ஜானகிராமன் அதிகம் தமிழுக்குத் தொண்டு புரிந்துள் ள ர்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
பக்கம்:காலத்தின் குரல்.pdf/40
Appearance