உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

கால் பந்தாட்டம்


சேர்ந்த இலக்குக் காவலரும், தாக்கும் குழுவைச் சேர்ந்த பந்தை உதைக்கவிருக்கும் ஒரு ஆட்டக்காரரும் ஆக, அந்த இருவர் மட்டுமே அப்பரப்பிற்குள் ஆடுவதற்குத் தயாராக முதலில் நின்று கொண்டிருப்பார்கள்.

இலக்கிலிருந்து 12 கெஜ தூரத்தில் (ஆடுகளப் பகுதி) உட்புறத்தில் குறிக்கப்பட்டிருக்கும் 'ஒறுநிலைப் புள்ளி' என்ற இடத்தில் பந்து நிலைப் பந்தாக வைக்கப்பட்டிருக்கும். உதைத்தாட இருக்கும் ஆட்டக்காரர் பந்து அருகில் நிற்க, பந்தைத் தடுப்பதற்குத் தயாரான நிலையில் இலக்குக் காவலர் தனது இலக்கின் கடைக்கோட்டின்மீது நின்று கொண்டிருப்பார்.

அவர், இரண்டு கம்பங்களுக்கிடையேயுள்ள கடைக்கோட்டின் மீது நிற்பார். ஆனால், நடுவரின் விசில் ஒலிக்குப் பிறகு கால்களை அசைக்காமல், நகர்த்தாமல் அவர் நின்று கொண்டிருக்க வேண்டும்.

விசில் ஒலிக்குப் பிறகு, பந்தை உதைப்பவர், எந்த ஏமாற்று வேலையையும் காட்டாமல், பந்தை இலக்கை நோக்கியே உதைக்க வேண்டும். பந்தை உதைக்கப் போவது போன்ற பாவனை செய்யாமல், உடனே பந்தை உதைக்க வேண்டும்.

அவர், தான் ஒரு முறை உதைத்தாடிய பந்தை, பிறர் தொட்டு விளையாடும் முன்பாக, தானே அப்பந்தை விளையாடக் கூடாது.

இவ்வாறு அந்த ஒறுநிலைப் பரப்பிற்குள்ளே, இருவரும் பந்தை ஆட முயலும்போது, தடுக்கும் குழுவினர் யாரேனும் இடையில் வந்து தவறு செய்தாலோ அல்லது குறுக்கிட்டாலோ, உதைக்கும்