டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
47
தாக்குகின்ற ஒரு காவலர், இலக்கின் ஒருபுறம் காத்துக் கொள்ள, காக்கப்படாத பிற பகுதியை ஒரிருவர் கண்காணித்துக் கொள்ளலாம்.
தலையாலிடித்து ஆடுவதில் அதிகத் திறமையுள்ளவர்களே மேற்கூறிய பிற பகுதியைக்காத்துக் கொள்ளுமாறு பணிக்க வேண்டும்.
ஒறுநிலை உதை (Penalty Kick) நிகழ்கின்ற போதில், இலக்குக் காவலர் தனது கால்களை அசைக்காமல் நின்று கொண்டிருப்பதுடன், பந்தை உதைக்கின்ற ஆட்டக்காரரையே முதலில் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். பந்தின் அருகில் அவரது கால் தொடரும்வரை பார்த்துக் கொண்டிருக்கும் கண்களும், உதைபட்ட பந்துடனே தொடர்ந்து வந்து கொண்டிருக்க வேண்டும். கண்கண்ட காட்சியுடனேயே கருத்தும் சென்று, கால்களையும் கைகளையும் இயக்கிடத் துண்டும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
காவலருக்கு சில குறிப்புகள்
பயிற்சியும் பழக்கமுமே ஒரு காரியத்தைப் பண்படுத்தும். ஈடற்ற உழைப்பாலும், எண்ணற்ற ஆட்ட அனுபவத்தாலுமே, மேற்கூறிய பண்புகள் எடுப்பாக வரும்.
எந்தவித நிலையிலும் எரிச்சலடையாத மனமும், எதிரியின் மேல் முரட்டுத் தனமாகத் தாக்கித்தான் பந்தைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு இரையாகாமலும், பொறுப்போடும், பூரண சிரத்தையோடும் பணியாற்ற வேண்டும்.