இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
35
எந்தப் பகுதியிலும் படாமல் போனால், அதற்குப் ‘பொய் ஓட்டம்’ (Bye) என்று கூறுவார்கள்.
மட்டையில் படாமல், அதைப் பிடித்திருக்கும் மணிக்கட்டைத் தவிர (Wrist) மற்ற உடலின் எந்தப் பாகத்தைத் தொட்டவாறு பந்து கடந்து சென்றாலும், அதற்காகப் பெறுகின்ற ஓட்டத்தை ‘மெய்படு ஓட்டம்’(Leg Bye) என்று அழைக்கப்படும்.
56 ‘பொய் ஓட்டம்’ (Bye) என்பதற்காக நடுவர் காட்டுகின்ற சைகை என்ன?
ஒரு கையை தலைக்கு மேலே உயர்த்தி விரித்துக் காட்டினால், அது ‘பொய் ஓட்டம்’ (Bye) என்பதற்கு அடையாளமாகும். (படம் காண்க)