(ஆசிரியர் அறிமுகம்) மகாவித்துவான் ரா. இராகவையங்கார் (1870-1946) ஆசிரியர் மகாவித்துவான் ரா. இராகவையங்காரின் முன்னோர்கள் காஞ்சிபுரம் பூரீபெரும்புதூர் அருகில் உள்ள திருப்புட் குழியில் வாழ்ந்தவர்கள். இவ்வூர் பல நூற்றாண்டுகள் வடமொழி, தென்மொழி வல்ல புலவர்கள் வசித்த இடம். பின்னர் இவர்களில் ஒரு சிலர் வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார் திருநகரிக்குக் குடியேறினார்கள். நைத்ருவ காசிப கோத்திர வைணவ அந்தணர்களுக்கு அத்தலத்து எப்பெருமானார் ஜீயர் மடாதிபத்யம் உரியதாகும். கட்டுரை ஆசிரியரின் குடும்பத்தார் பின் சேது நாடு வந்து தமிழ். வடமொழி வல்லவராய்த் திகழ்ந்தனர். 1870 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாள் பிறந்த ஆசிரியரின் பெற்றோர் இராமாநுஜ ஐயங்கார்-பத்மாசனி ஆவர். பிறந்த ஊர் சிவகங்கை அருகில் உள்ள தென்னவராயன் புதுக்கோட்டை இளமையி லேயே தந்தையை இழந்து மாமா சதாவதானம் முத்துசுவாமி ஐயங்கார் ஆதரவில் தமிழ் இலக்கியங்களைக் கற்றார். தமிழார்வத்தால் உந்தப்பட்டு பள்ளிப் படிப்பை நடுவிலே விட்டு. தமிழை ஆதரிக்கும் வள்ளல்களிடம் தம் தமிழறிவைக் காட்டி அவர்களால் ஆதரிக்கப்பெற்றார். மதுரைச் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சிலகாலம் தமிழாசிரியராகப் பணி புரிந்தார். திருமணத்துக்குப்பின் திருச்சி தேசிய உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராக அமர்ந்தார். இவர் தமிழார்வத்தி னால் பெரிதும் ஊக்கப்பட்டு. இவர்மாணவர்களில் பலர், தமிழையே வாழ்க்கைத் துணையாக எடுத்துக் கொண்டார்கள். இக்காலத்தில் தான் டாக்டர் உவே. சாமிநாதையரவர்களுடன் குடந்தையில் தொடர்பு ஏற்பட்டது. இருவருக்கும் சங்க நூல்கள் பதிப்பிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது.
பக்கம்:கீதைப்பாட்டு.pdf/20
Appearance