உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கீதைப்பாட்டு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ஜுன விஷாத யோகம் 45 குந்தி மகனாகிய யுதிஷ்டிர ராஜன் அநந்த விஜயம் என்ற சங்கையும், நகுலனும் சகதேவனும் முறையே சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினர். காச்யச்ச பரமேஷ்வால: சிகண்டி ச மஹாரத: த்ருஷ்டத்யும்னோ விராடச்ச லாத்யகிச்சா பராஜித: த்ருபதோ த்ரெளபதேயாச்ச ஸர்வச: ப்ருதிவீபதே லெளபத்ரச்ச மஹாபாஹன: சங்கான் தத்மு: ப்ருதக் ப்ருதக் 17:18, வில்லிற் றலைமைகொள் காசியாள் வேந்தன் சிகண்டியென் மாரதன் விராடன் றுரோபதை மைந்தர்தோள் வீங்குக பத்திரை சேயொனார் வெல்லற்கரியவன் சாத்தகி மேயது ருபதன் திட்டத்துய்ம் மன்னனனை வருமன்னவ வேறுவே றேவளை யூதினார். 17-18 வில்லாளிகளில் மிகச்சிறந்த காசிராஜனும், மகாரதனாகிய சிகண்டியும், திருஷ்டத்யுந்நனும், விராடனும், வெல்லப்படாத ஸாத்தியகியும், துருபதனும், துரோபதை மக்களும், பெருந் தோளுடையவனாகிய சுபத்திரை மகனும், தனித்தனியே தத்தம் சங்குகளை ஒலித்தனர். பூமிக்குத் தலைவனே (இங்கு பூமிக்குத் தலைவன் என்று திருதராஷ்டிரனை கதை சொல்லிவரும் சஞ்ஜயன் விளிக்கிறான்) லகோஷோ தார்த்தராஷ்ட்ரானாம் ஹ்ருதயானி வ்யதாரயத் நபச்சு ப்ருதிவிஞ்சைவ துமுலோ வ்யனுநாதயன் 19. தரைவி சும்பெலா மெதிரொ லிக்கவே தாவி யெங்கனும் போயு மவ்வொலி திருத ராட்டிரன் சிறுவர் நெஞ்சைமாத் திரம டுத்துழிப் பிளவு செய்ததே. 19 அக்க பெருமுழக்கம் வானையும் மண்ணையும் உடனொலிக்கச் செல்லகாய், திருதராஷ்டிரக் கூட்டத்தாரின் நெஞ்சுகளைப் பிளந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/46&oldid=799923" இலிருந்து மீள்விக்கப்பட்டது