உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கீதைப்பாட்டு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ஜுன விஷாத யோகம் 47 ஹஞ்ஜய உவாச : ஏவமுக்தோ ஹ்ருஷகேசோ குடாகேசேன பாரத லேனயோ-ருபயோர்-மத்த்யே ஸ்தாபயித்வா ரதோத்தமம் 24. துயிலை யாளு மவனி தோத விருடி கேச னிருபதேர் உயர்வின் வீறியதைந டாவி யுபய சேனை யிடை நிறீஇ. 24 சஞ்சயன் சொல்லிக்கொண்டு வருகிறான் : கேளாய் பரத நாட்டரசே, இங்ங்னம் பார்த்தனுரைத்தது கேட்ட கண்ணன் மிகவும் மேன்மை கொண்ட அத்தேரை இரண்டு படைகளுக்குமிடையே கொண்டு நிறுத்தினான். பீஷ்மத்ரோன ப்ரமுகத ஸர்வேஷாஞ் ச மஹீகூகிதாம் உவாச பார்த்த பச்யைதான் ஸ்மவேதான் குருனிதி 25. வீடுமர் துரோணர் முதலாய பெரியோர்க்கு மேதினி புரப்ப ரனைவர்க்கு மெதிரேதான் கூடுகுரு வின்மரபு ளாளிவரை நோக்கிக் கொள்கபிரு தைக்கொரு குமாரவென விண்டான். 25 பீஷ்மனுக்கும் துரோணனுக்கும் மற்றெல்லா வேந்தருக்குமெதிரே தேரை நிறுத்திக்கொண்டு: “பார்த்தா இங்கு கூடி நிற்கும் கெளரவரைப் பார்' என்றான். தத்ராபச்யத் ஸ்த்திதான் பார்த்த: பித்ருனத பிதா மஹான் ஆசார்யான் மாதுலான் ப்ராத்ரூன் புத்ரான் பெளத்ரான் ஸ்கீன்-ஸ்ததா 2627 பிருதைமக னங்கண் ணிருபடையு னின்ற பிதிரர் குறுவோர் பிதாமகர் பல்பேரர் ஒருதுணைவர் சேய்பெண் ணுதலியவர் தோழ ருடன்வயிறு ளார்மா துலரைவிழி கண்டான். 26, 27 அங்கு பார்த்தன் தன்னுடைய தந்தையாரும், பாட்டன் மாரும், குருக்களும், மாதுலரும், அண்ணன் தம்பிகளும், மக்களும், பேரரும், தோழர்களும் நிற்பது கண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/48&oldid=799925" இலிருந்து மீள்விக்கப்பட்டது