பதிப்புரை 9 என் இனிய நண்பர் அமரர் க.சி. கமலையா அவர்கள் வழியாக மகாவித்துவானின் தவப் புதல்வர் வித்துவான். ரா. இராமாநுஜையங்கார் அவர்களின் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. நாங்கள் மகாவித்துவான் நூல்களை வெளியிட முயன்றோம். நான் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணி புரிந்து வந்தபோது, மகாவித்துவான் யாத்த 'இராஜராஜ சேதுபதி ஒரு துறைக் கோவை' நூற்பிரதியைப் பெற்றுக் குறிப்புரையுடன் சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகத்தின் வழி 1984 இல் வெளிவரச் செய்தேன். அதன்பின் 'ஆத்திசூடி உரை யைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வழி 1985 இல் வெளியிட்டேன். அப்போதே கீதைத்தாழிசைப் பிரதியையும் Јт. இராமாநுஜையங்கார் வெளியிட என்னிடம் தந்திருந்தார். அவர் மறைவிற்குப் பின்னரே மேலே சுட்டிய முதல் இரண்டு நூல்களும் வெளிவந்தன. மகாவித்துவானின், 'குறுந்தொகை விளக்கம்’ என்னும் நூலின் பிரதி முழுமையையும் அவரது பேரன் திரு. ரா. விஜயராகவன் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தினரிடம் வெளியிட ஒப்படைத்திருந்தார். இந்நூல் வெளியீட்டின் பதிப்புக்குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். அக்குழு கேட்டுக் கொண்டதின்படி நூலின் மூலப்படியை நன்கு ஒப்புநோக்கி நல்ல முறையில் பதிப்பித்து உதவினேன். இந்நூல் 1993 இல் வெளியாயிற்று. மகாவித்துவானின் பேரனாகிய திரு. ரா. விஜயராகவன் மும்பை டாட்டா ஆராய்ச்சிக் கழகத்தின் விஞ்ஞானி ஆவார். இவரும் அவர் தந்தையார் காலத்திலேயே எனக்கு அறிமுகமாயிருந்தார். இவர் சென்ற ஆண்டு 1996 மகாவித்துவானின் அச்சில் வாராத நூற்பிரதிகளையெல்லாம் என்னிடம் ஒப்படைத்திருந்தார். அவர் இந்தியன் வங்கியின் உதவிபெற்று "இன்கவித்திரட்டு' என்னும் நூல் வெளிவர உதவினார். இத்திரட்டில், 'திருவேங்கடமாயோன் மாலை', 'திருவடிமாலை', 'திருப்புல்லாணியமக வந்தாதி' என்னும் நூல்கள் அடங்கியுள்ளன. இவற்றுள், திருப் புல்லாணியமகவந்தாதி என்னும் நூலுக்கு மகாவித்துவான் எழுதி வைத்திருந்த விளக்கவுரையும் இடம் பெற்றுள்ளது. இவ்வுரை பண்டைய நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்றோரின் உரையை ஒத்து அமைந்துள்ளது. ஆனால், இந்நூற்றாண்டின் முற்பகுதியில் உருவான கீதைப் பாட்டு வெளிவரும் நிலை இறையருளால் இப்பொழுதுதான் வாய்க்கப் பெற்றது.
பக்கம்:கீதைப்பாட்டு.pdf/9
Appearance