இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17
அவன் அவள்
முதல் இரவின்
மோகன உறவில்
முட்டி மோதி
உடைகிற தந்தத்
தாஜ்மகல்.
18
எள்ளளவும் இல்லை
முன் யோசனை....
ஓடி அலுத்துத்
தேடிச் சலித்துக்
கடைசியில் மான்
கமழக் கண்டது,
தன்னுள்
கஸ்தூரி வாசனை.
மீரா ◯ 31