உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குடிமகனின் அடிப்படை உரிமையா-சட்டமன்ற உரிமையா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23



ceedings for the enforcement of the rights conferred by this part is guaranteed.

எம். எஸ். எம். சர்மா என்பவருக்கும், கிருஷ்ண கின்ஷா என்பவருக்கும் இடையிலான வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம், "அரசியல் சட்டம் 105{3) மற்றும் 194 (3) பிரிவுகள் முறையே பாராளுமன்ற, சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட சாதாரணச் சட்டங்கன் அல்ல; அவை அரசியல் நிர்ணய சபை சட்டங்களாகும் என்றும், அவை, அடிப்படை உரிமைகள் சம்பந்தப்பட்ட அரசியல் சட்டப் பிரிவுகளைப் போலவே முழுமை பெற்றனவாம்’ என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது.

The supreme court also held, that the provisions of articles 10 ; (3) and 194 (3) are constitutional laws and not ordinary laws made by parliament or State Legislature and that, therefore, they are as supreme as the provisions of articles relating to fundamental rights. A. I. R1959 S. C. 395 -

இதை, கவுல் அவர்களும், ஷக்தர் அவர்களும் “பாராளுமன்ற பழக்க வழக்கங்களும், நடைமுறைகளும்" (Practice and procedure of parliament) என்ற தம்முடைய நூலின் 232 ஆம் பக்கத்தில் எடுத்துக் காட்டியுள்ளனர்.

இந்த அரசியல் சட்டப் பின்னணியில் பாராளுமன்ற, சட்டமன்ற உரிமைகளுக்கும், குடிமகனின் அடிப்படை உரிமைகளுக்கும் மோதல் வரும் போது என்ன நிலைமை என்பதைப் பார்க்க வேண்டும்.

அதற்கான விளக்கத்தையும் உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பு ஒன்றில் வழங்கியுள்ளது.1954இல் கேசவ சிங் என்பவர், சட்டமன்ற உறுப்பினர் ஒருவரைப் பற்றிக் கூறிய கருத்து சட்டமன்றத்தையே அவமதித்ததாகக் கொண்டு உத்திரப்பிரதேச சட்ட மன்றம் அவருக்கு ஏழு