உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47


குழந்தைகள்

தகப்பனாவதில் சிரமம் ஒன்றுமில்லை. - துருக்கி

மூன்று பெண்களுக்கு அப்பால் பிறந்த பையன் பிச்சை யெடுப்பான்; மூன்று பையன்களுக்கு அப்பால் பிறந்த பெண் இராஜ்யத்தை ஆள்வாள். - இந்தியா

உன் மகன் நல்லவனானால், நீ ஏன் சேமிக்க வேண்டும்? உன் மகன் தீயவனானால், (அவனுக்காக) நீ ஏன் சேமித்து வைக்க வேண்டும்? -( ,, )

இருண்ட வீட்டின் ஒளி-மகன். குழந்தையின் ஓட்டம் தாய்வரைக்கும். -( ,, )

பதினாறு வயது வரை மகன், அதற்கு மேல் தோழன். -( ,, )

குழந்தைகள் இல்லாத வீடு சுடுகாடு. -( ,, )

பிரியமுள்ள தந்தையரும் தாயாருமே உண்டு, பிரியமுள்ள பிள்ளைகளும் பெண்களும் இல்லை. -சீனா

பெண் பிறக்கும் பொழுது வெளியே பார்த்துக்கொண்டு வருகிறாள், பையன் பிறக்கும் பொழுது உள்ளே பார்த்துக் கொண்டு வருகிறான். -( ,, )

வானத்திற்கு மணி சூரியன், வீட்டுக்கு மணி குழந்தை.

-( ,, )

குழந்தையில்லாத செல்வன் சீமானல்லன்; செல்வமில்லாது குழந்தைகளை மட்டும் பெற்றவன் ஏழையுமல்லன்.

-( ,, )

உங்கள் குழந்தைகளுக்கு அமைதியான வாழ்க்கை வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், அவர்களுக்கு எப்பொழுதும் கொஞ்சம் பசியும் குளிரும் இருக்கும்படி செய்யுங்கள். -( ,, )

விளையும் பயிர் முளையில் தெரியும். - தமிழ்நாடு

ஆணை அடித்து வளர்க்க, பெண்ணைத் தட்டி வளர்க்க.

-( ,, )