உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குடும்பப் பழமொழிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

ஐந்துக்கு மேலே அரசனும் ஆண்டி. - தமிழ் நாடு

[ஐந்து பெண்களுக்கு மேல் பிறந்து விட்டால், பெற்றோரின் செல்வம் காலியாகும்.]

உன் பையனிடம் உனக்கு அன்பிருந்தால், அவனை அடித்து வளர்க்கவும்; வெறுப்பிருந்தால், தின்பண்டங்களை வாங்கி (அவன் வாயில்) திணிக்கவும். -சீனா

ஐந்து பெண் குழந்தைகளுள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை. -( , , )

(குடும்பத்தின் சொத்து விரைவிலே தீர்ந்து விடும்.)

கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும்.

-( , , )

பெண் பிறந்தால், வீட்டுக் கதவு நிலை நாற்பது நாள் அழும்.

-அரேபியா

என் இதயம் என் மகனை நோக்கிச் செல்கின்றது, அவ னுடைய இதயமோ ஒரு கல்லை நோக்கிச் செல்கின்றது.

-( , , )

மகள் இருந்தால், தாய்க்குச் செலவு இருந்து கொண்டே யிருக்கும். -ஆர்மீனியா

உன் பிள்ளைகளையும் பெண்களையும் நம்பியிருந்தால், உனக்கு இரு கண்ணும் இல்லை. -பாமா

[நம்பியிருத்தல் வீண்.]

தானாகத் தடுக்கி விழுந்த குழந்தை அழுவதில்லை .

- கால்மிக்

குழந்தைகள் நிறைந்த வீட்டில் சயித்தான் ஆள்வதில்லை.

-குர்திஸ்தானம்

வீடு என்றால், மூன்று குழந்தைகளாவது இருக்கவேண்டும்.

-( , , )