உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குப்பைமேடு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

35

'கருமை இளமைதரும்; அவள் தன் தன்மையை மாற்றிக்கொள்ள மறுக்கிறாள்'

'இளமை அழகு தருமே”

"அவள் சலித்து விட்டாள் வேறு ஏதாவது இருந்தால் பேசுங்கள்; என் பாள்'

நிலைமை எனக்குப் புரிந்தது. அவர்கள் புனிதவதியார் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

"தெய்வ பக்தி அதிகம்' என்றார் .

அவர்கள் மகிழ்ச்சி குறைவுக்குக் காரணம் விளங்கி யது.

-8

அவரைப் பார்க்கும்போது நான் முன்பு குடியிருந்த வீட்டுக்கு எதிரில் இருந்த இவர் நகல் ஒருவர் கவனத்துக்கு வந்தார், ஒழுங்காக வேலை செய்தவர், ஒழுங்காக ஓய்வூ, தியம் பெற்றவர், எதிர்பார்க்கவில்லை, அவர் மனைவி அவரிடமிருந்து பென்ஷன் வாங்கிக் கொள்வார் என்று.

'மாரடைப்பு' என்றார், வைத்தியர் வருமுன் கதவடைப்பு நேர்ந்துவிட்டது. காலன் அவளுக்கு எமனாக வந்து சேர்ந்தான்; அகால மரணம் என்றார்,

அவருக்கு இரண்டு பெண்கள்; மூன்று பையன்கள் அவற்றின் விரிவுகள்; பிரிவுகள் எல்லாம் இருக்கிறார்கள், இருந்தும் அவர் துயரத்தை ஆற்ற ஆறுதல் கூற இயல வில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/37&oldid=1113011" இலிருந்து மீள்விக்கப்பட்டது