உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 குற்றம் பார்க்கில் வெம்மையில் சிவராமன், தன் செல்லாக் கோபத்தைச் செலவழிக்க நினைத்தவராய், "உங்களுக்கெல்லாம் பணம் அதிகமாகிறது என்பதைவிட, சாந்திக்கு நல்ல இடத்தில் வரன் கிடைத்து விட்ட பொறாமை. " "அப்பா அவள் அப்படி என்ன பெரிதாகச் சொல்லி விட்டாள்? நீங்கள் என்னவெல்லாமோ பேசுகிறீர்களே..." என்றான் குமார் அவன் குரல், எரிச்சலை வெளிப்படையாகக் காட்டியது சிவராமனால் கோபத்தை அடக்க முடியவில்லை "ஒஹோ இப்பச் சொன்னது சின்ன விஷயம்; இன்னும் பெரிய விஷயங்களைப் பிரயோகப் படுத்தாமல் வைத்திருக்கிறீர்களோ? பரவாயில்லை. நீங்கள் ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவேண்டாம். என்னால் கோமதிக்கு நகையை அனுப்ப முடியும்" என்று சொல்லிவிட்டு, கிராமத்தில் இருந்த பழைய வீட்டை நினைத்துக் கொண்டார். பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல் "சாந்தி காப்பி கொண்டு வா" என்று ஆணையிட்டாள் மருமகள். ஒரு வேளை, மாமனாரின் பேச்சுக்குப் பதிலாக வந்த உதாசீனமோ? எதிர்காலக் கணவனோடு, கற்பனையில் லயித்துக் கொண்டிருந்த அந்தத் தூரில் முளைத்த தளிர் தெளிவான உலகத்திற்கு வந்து, தனக்காக மட்டுமல்ல; தந்தைக்காகவும் அழுதது. கிராமத்திற்குப் போய் வீட்டையும், நிலத்தையும் பணமாக்கி, அதைப் பம்பாய் மகளுக்கு அனுப்பிவிட்டு வந்த சிவராமனை, அவரது இரண்டாவது மகள் - டில்லிக்காரி - இரண்டு பிள்ளை களோடு வாசலில் வரவேற்றாள். "என்னம்மா? மாப்பிள்ளை வரவில்லையா?" அவள் மெளனமாகக் கண்ணிர் வடித்தாள். சிவராமன் பதறிப் போனார். "என்னம்மா? என்ன நடந்தது?" "அப்பா எனக்கு எட்டாயிரம் ரூபாய்க்கு நகை போட்டு விட்டு, சாந்திக்குப் பத்தாயிரத்துக்கு நகை போடுவது என் மாமியாரின் கண்ணை உறுத்துகிறது உங்கள் மாப்பிள்ளையிடம் ஏதேதோ சொல்லிக் கொடுத்து விட்டார். அவர் என்னை இங்கே அனுப்பி விட்டார். இரண்டாயிரம் போனால்தான் அவர் இந்த வாசலை மிதிப்பாராம்: நான் அந்த வாசலை மிதிக்க முடியுமாம்." சிவராமன் இப்போது பதறவில்லை முற்றும் நனைந்தார்க்கு