இன்றைய வாழ்க்கை நியதி உழைப்பவர்களுக்கு உரிய பலன் கொடுப்பதாக அமையவில்லை. திறமைக்கும்
உண்மைக்கும் நேர்மைக்கும் மதிப்பு இல்லை. இந்நிலை
என்றும் நீடிக்காது; நீடிக்கக்கூடாது என்பதுதான் சிந்தனையாளர்களின் முடிவு. உழைப்போரை வெகுகாலம் ஏமாற்றிக் கொண்டி ருக்க முடியாது. கட்டுண்டோம்; காத்திருப்போம்; காலம் மாறும் என்று ஆகாயத்தைப் பார்த்துக் கொண் டிருப்பவர்கள் கூட, வாழ்க்கை அனல் அடிவயிற்றைக் தீய்க்கும்போது, உடலைச் சுடுகிறபோது, உள்ளத்தைக் கறுக்குகிறபோது காலம் தானாக மாறாவிடிலும், காலத்தை மாற்ற வேண்டியதுதான் என்று துணிபும் தெம்பும் பெற்றுவிடுவார்கள். 'மாறு அல்லது மாண்டு ஒழிவோம்' என்று துணிந்து உரிமைப்போரிட உலக மக்கள் முன் வந்து வெற்றிகண்டு, புது உலகம் அமைக்கும் போது யுத் தத்திற்கு முற்றுப்புள்ளி விழலாம். ஆனால் அப்பொழுது கூட யுத்தத்திற்கு சமாதி கட்டப்படும் என்பது சந்தேகத் துக்கிடமான பிரச்னை தான்! இன்று, யுத்தங்கள் நாகரிக உலகத்தின் சாபக்கேடு; மனித வர்க்கத்தின் இழுக்கு, என்றெல்லாம் கருதப்படி னும் யுத்தத்தின் கோரப்பசியைத் திருப்திப்படுத்தும் துணைகளாக புதிய புதிய கருவிகளையும் விஷச் சக்திகளையும் ஆக் கிக்கொண்டு தானிருக்கிறார்கள். தற்காப்பிற்காக என்று தயாரிக்கப்படும் போர்ச்சாதனங்கள், நாளாவட்டத்திலே தங்கள் உற்பத்திப் பெருக்குகளை விற்பனை செய்வதற்கு ஏற்ற நிரந்தரச் சந்தைகளைப் பல தேசங்களில் நிர்மாணிப் பதற்காக நாடு பிடிக்கவும், போட்டிக்கு வருகிறவர்களை