இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14
சகுந்தலா
எதிர்பாராதது எதுவும் கடக்கக் கூடும் என்ற நினைப்பிற்கே இடமில்லாம லிருந்ததனால், அவன் தடதடவென்று சென்று தடாலென நாற்காவியைத் தரையிலே போட்டுவிட்டு நிமிர்ந்தான். திகைப்புற்றான். பயந்து மிரண்டவள் போல் நின்ற அடுத்த வீட்டுக்காரி அவன் பார்வையில் பட்டாள்.
அவள் பயந்து விட்டது உண்மைதான். அவ்வேளையில் அந்தப் பக்கம் அவன் தலைகாட்ட மாட்டான் என்று அவள் நிச்சயமாக நம்பியிருந்தாள். சில தினங்களாக அவள் கவனித்ததில், தோட்டத்தில் யாருமே நடமாடுவதில்லை அதைப் பாழடைய விட்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டாள். கிணறும் விசாலமான இடமும் இருக்கும் பொழுது. அவற்றை ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று எண்ணினாள். தோட்டத்தைப் பயன்படுத்திக் காய்கறிப் பயிர் வளர்க்கலாம்;அதற்கு முன்னதாக ஒன்றிரண்டு பூச்செடிகளை நட்டு வைக்கலாம் என்று தீர்மானித்தாள்.
அவள் தன் தீர்மானத்தைச் செயலாக்க அன்றுதான் நல்ல நாள் பார்த்திருந்தாள் போலிருக்கிறது! அல்லது அன்றைக்குத்தான் செடிகள் கிடைத்தனவோ என்னவோ? வெயிலயும் பொருட் படுத்தாமல் அவள் செடி நடும் பணியில் முனைந்திருந்தாள். அவளுக்குத் துணையாக ஒரு பெண்ணும் நின்றது. அதற்குப் பன்னிரண்டு பதின் மூன்று வயதிருக்கலாம்.
'வேலைக்காரப் பெண்ணுகத்தானிருக்க வேண்டும்' என்று ரகுராமன் நினைத்தான். முதலில் அவன் அந்தப் பெண்ணைச் சரியாகக் கவனிக்கவேயில்லை. வாளியையும், மண்ணில் குத்திக் கிளறிச் செடி நடுவதற்குரிய கருவியாக உபயோகிக்கக் கொண்டு வந்திருந்த அகப்பையையும் எடுத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பிய போதுதான் நன்றாகக் கவனத்தான். அதுவரை அவன் பார்வை அவள் மீதே பதிக் திருந்தது.
கதவு திறக்கப்பட்ட ஓசையைக் கேட்டுத் திரும்பியவள் பக்கத்து வீட்டில் வசிப்பவன் நாற்காலியுடன் வந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டாள். அவன் வேண்டு மென்றேதான் வந்திருப்பானோ, 'தடாலென்று' தரையிலே போட்டிருப்பானோ எனும் சிறு சந்தேகம் அவள் உள்ளத்தில் வெட்டியது. ஆனால் அவன் திகைப்படைந்து நின்று விட்டதைத் கண்டதும் 'அப்படி யிராது. இது தற்செயலாக கடந்த சம்பவம் தான்' என்று விளங்கியது அவளுக்கு.