உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சகுந்தலா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

சகுந்தலா



பதுங்கி யிருந்த முகம் அவன் கண்களில் தென்படுவதற்கு முன்னதாகவே பின் வாங்கிவிட முயன்றும் முடியாமல் போனதை உணர்ந்தான் அவன்.'அது அவள் தான். அந்தக் குறுகுது விழிகள் வேறு யாருக்கும் இருக்க முடியாது. அவளே தான்' என்று மகிழ்ந்தது அவன் மனம். 'சகுந்தலா சந்தோஷப்படுவாள். நான் பயம் எழுப்பும் பண்பினன் அல்ல என்பது அவளுக்குப் புரியாமலா போகும்!' என்ற தினைப்பும் உண்டாயிற்று அவனுக்கு.

  ஆனால் அவன் நினைத்தது எவ்வளவு தப்பு என்பது மறுநாள் தான் அவனுக்கு விளங்கியது. காலையிலே அவன் தோட்டத்தின் பக்கம் வந்தபோது அவன் கண்களை உறுத்தின பிடுங்கி எறியப்பட்ட செடிகள் சில. அவை அவன் வீட்டுப்பக்கம் தான் விசிறி எறியப் பட்டிருந்தன. தான் பரிவுடன் நட்டு வைத்த செடிகளாகத்தா னிருக்க வேண்டும் அவை என்ற உண்மை அவன் உள்ளத்தில் உதயமானதும், வேதனைச் சுமை கவிந்தது அங்கே.
  'எவ்வளவு ராங்கி அவளுக்கு அவள் மகா கர்வக்காரி என்பதுதான் முதல் நாள் அவளைப் பார்த்த போதே புரிந்ததே. செடிகளை யார் நட்டால் என்ன? பாழாகும் இளஞ் செடிகளை நட்டது தப்பிதமாக்கும்? பிடுங்கி எறிந்து விட்டாளே பாதகத்தி! அவள் மோறையும் மூஞ்சியும்!'என்று கனன்று கொதித்தது அவன் உள்ளம். அதே 'மோறையையும் மூஞ்சியையும்' தான் வியந்து போற்றி நினைவினால் வரைந்து அழித்து மீண்டும் எழிலுறத் தீட்டிக் கண்டும் எண்ணியும் மகிழ்ந்து கொண்டிருந்தான் என்பதை அவனே உணர்ச்சி வெறியில் மறந்து விட்டான்!
  அவனுக்கு வந்த ஆத்திரத்தில் அப்படியே போய் அவள் நட்டிருந்த செடிகளையும்—காலைக் குளுமையில் சிறிது தலை திமிர்ந்து நின்ற பச்சிளஞ் செடிகளை—வேரோடு பிடுங்கி வீசி எறியலாமா என்றிருந்தது. அப்புறம் அது வீண் பழி களுக்கு இடமளிக்கும். பெரிய குற்றமாகப்படும் என்று எண்ணி அவன் செயல் புரியவில்லை.
  'இவளுக்குப் போப் சகுந்தலை என்று பெயர் வைத்திருக்கிறார்களே! நேற்று இவள் செடிகளை நட்டபோது பொருத்தமான பெயர் தான் என்று நினேத்தேன். இவள் செடிகளைக் கொல்லும் எமனாக அல்லவா இருக்கிறாள்!' என்று முணமுணத்தான் ரகுராமன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/20&oldid=1682193" இலிருந்து மீள்விக்கப்பட்டது