உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் 1 1 ஆனால் ஒரு கன்டிஷன் என்கிட்டே ஒங்க அப்பா, உன் ஜாதி எதுன்னு கேட்டால் என்னால ஒங்க ஜாதின்னு சொல்ல முடியாது. உண்மையான பொருளை உண்மை யான வழியில்தான் அடையனும்.’’ அய்யய்யோ...இது நீங்க வீட்டுக்கு வராமல் இருக்கறத விட மோசம். ' அதனாலதான் வரலேன்னேன்!' "பழையபடி ஒங்க புத்தியைக் காட்டுறீங்க, பாருங்க... என்ன டியர், நாம் ஜாதிகளை அங்கீகரிக்கலை; அதனா லேயே அது இல்லனு ஆயிடாது. அப்பாகிட்ட நீங்க நம்ம ஜாதின்னு சொல்லியிருக்கேன்.'" "தர்மர் அஸ்வத்தமா செத்துட்டார்ன்னு சொன்ன மாதிரி...' தப்பு: அவர் பொய்க்கு உண்மை முலாம் பூசினார். நான் உண்மைக்கு பொய் முலாம் போட்டுப் பார்த்தேன்! உலகத்துல நம்ம ஜாதி என்கிற மனித ஜாதியைத் தவிர. எந்த ஜாதியும் கிடையாது. இந்த உண்மையை பொய்யாச் சொன்னேன். நீங்களும் சொல்லணும் அவ்வளவுதான்...' ஸா ரிம்மா...'

  • சரி, ஒரு காம்ரமைஸ்... நீங்களா எதுவும் சொல்ல வேண்டாம்! அப்பா இதைப்பற்றி பேசும்போது நீங்க மெளனமாய் இருக்கணும். என்ன சொல்றீங்க? ஏன் பேசாமல் இருக்கீங்க...'

மெளனம் மூலம் பேசுறேன். சம்மதமுன்னு சொல் லாமல் சொல்றேன். ஏய்... ஏய்... இது பப்ளிக் பிளேஸ்... கழுத்தை விடு!’’ இருவரும் சாலையை நோக்கி நடந்தார்கள். அவன் வேட்டியில் படிந்த மண் துகள்களை அவள் தட்டிவிட்டாள். பஸ் நிலையத்தை நோக்கி நடக்கப் போனவனை, அவள்