உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் I 3 கொண்டார்கள். சற்று தொலைவில் துணிகளை துவைத்துக் கொண்டிருநத முத்தம்மா அந்த ஜோடி உள்ளே போனதும், காதலுக்குக் கண்ணில்லை என்கிறது சரிதான்' என்றாள். உடனே தோட்டக்காரர் கண்ணில்லாட்டிலும் மூளை இருக்குற மாதிரி தெரியுது. என்றார். முத்தம்மா அதை அங்கீகரிப்பவள்போல பேசினாள். நாற்பது வயதுக்காரி. உழைப்பு உளியால் செதுக்கப்பட்ட காமாட்சி அம்மன் சிலை போன்ற மேனி, மின்னல்போல் வெட்டும் கருப்பு உதடு களால், சிவப்பு வார்த்தைகளைப் பேசினாள். காதலுக்கு, கண்களைவிட மனசுதான் காரணம். இன்னைக்கு நாட்ல வரதட்சணை கொடுமைன்னு பேசு றாங்க. இது நம்மை மாதிரி ஏழைகள் கிட்டே இல்லாத பிரச்சனை. பெரிய இடத்துப் பிரச்னைக. சின்ன இடத்துல போட்டுட்டு, சின்ன இடத்து பிரச்சனையை, சில்லரைப் பிரச்சனையாய் நினைக்கிற காலம் இது. இதை எதுக்கு சொல்ல வந்தேன்னா, நாட்ல படிச்ச பெண்கள், தன்னை விட எல்லா வகையிலிம் உயர்ந்தவனை புருஷனாய் கேட்கிறாங்க. இது கிடைக்கலன்னா, வரதட்சணை கொடுமையாம். இவள்கள் ஏன் வசதியில்லாத அதே சமயம் நல்ல பையன்களை கல்யாணம் பண்ணப்படாது! ஏதோ அம்மா பானு செய்து காட்டிருக்கு. அந்தப் பையன் பார்க் கறதுக்கு அன்னக்க வடி, பரதேசி மாதிரி இருந்தாலும், எவ்வளவு அழுத்தமாய் போகுது பாரு...' ஏதேது! இவங்க ரெண்டுபேருக்கும் இடையில், நிதான் லவ் லட்டரை கொடுத்திருப்பே போலிருக்கு!" முத்தம்மா, விகற்பம் இல்லாமல் சிரித்தாள். இந்த வெளிப்பட்ட, ஒசைப்படாத சிரிப்புக்கு உள்வட்ட மான வரவேற்பு அறையில். பானுவின் அண்ணன் பாஸ்கர னிடம் எதையோ பேசிக்கொண்டிருந்த செல்வம், தணிகா சலத்தைப் பார்த்துவிட்டு, எழுந்து கும்பிட்டான், பிறகு.