கட்டுப்பட்டால் 37 போட்டார். உதடுகள் வெடித்தன. தூக்கிய தோள்கள் துடித்தன. எடுத்த கைகள், அவள் கழுத்தில் பட்டன. பிறகு, சன்னமான குரலில் மாப்பிள்ளை..." என்று சொன்னதை, பானு கேட்கவில்லை. அவள் அழுகையே, அவள் காதுக்கு தாழிட்டது. முத்தம்மாதான் கேட்டாள்.
- கேட்டுக்கு வெளியே... அந்த பிள்ளையாண்டான் நிற்கிறார். கூட்டிட்டு வரட்டுங்களா அய்யா!'
கூப்... கூப்' என்ற சத்தம்; மகளைப் பார்த்துவிட்ட மன நிறைவு; மருமகனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல். மகள் கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிறு, தன் உதட்டில் பட்ட தால் ஏற்பட்ட சோகக் கலப்பான மகிழ்ச்சி. முத்தம்மாவை நோக்கி இன்னுமா போகவில்லை’ என்பது போன்ற பார்வை. முத்தம்மா வெளியேறியபோது, பானுமதியின் ஊனை உருக்கும் ஒலங்கேட்டு, காரோட்டி பெருமாள், தோட்டக்கார துரைராஜ் உட்பட, வேலையாட்கள் உள்ளே வந்துவிட்டார்கள். தந்தையையும் மகளையும் அழுதழுது பார்த்தார்கள். அவர்களோ, ஒருவர் கண்ணில் இன்னொருவர் முகம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இதற்குள், செல்வம் உள்னே வந்தான். அவர் கிடந்த கோலத்தை எதிர்பார்க்காதவன் போல் திடுக்கிட்டான். பின்பு அவர் கால்களில் தன் கண் களை ஒற்றிக்கொண்டு, கைகளைக் கட்டியபடியே அவரைப் பார்த்தான். அவரைப் பார்க்க, அவன் கண்கள் வேர்த்தன. அவரோ அவனையும், மகளையும் அடுத்தடுத்து பார்த்தார். பிறகு மகள் கையைப் பிடித்து செல்வத்தின் கையில் கொடுக்கப் போனார். அழுகையைக் கேவலாக்கிய LITEŅI, மீண்டும் குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டாள். செல்வம் அவளை ஆதரவாகப் பிடித்துத் தன் தோளோடு தோளாய் அணைத்துக்கொண்டான். அதைப் பார்த்த திருப்தியில் தணிகாசலம் புன்னகைப்பது போலிருந்தது.